twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல் வாக்குறுதியே இதுதான்... திட்டத்தோடு தேர்தலில் களமிறங்கும் கே.இ.ஞானவேல்ராஜா!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    'சினிமா மாஃபியாக்களை ஒடுக்கத்தான் தேர்தலில் நிற்கிறேன்..' - ஞானவேல்ராஜா சூளுரை!- வீடியோ

    சென்னை : தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் பதவியை கே.இ.ஞானவேல்ராஜா ராஜினாமா செய்துள்ளார். அவர் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் தனி அணி அமைத்துப் போட்டியிடுகிறார்.

    இவரது அணியில் தலைவர் பதவிக்கு இவரும், துணைத்தலைவர் பதவிக்கு கே.ராஜன், செயலாளர் பதவிக்கு நேசமணி, துணைச் செயலாளர் பதவிக்கு ஸ்ரீராம், பொருளாளர் பதவிக்கு 'மெட்டி ஒலி' சித்திக் ஆகியோர் போட்டியிடவிருக்கிறார்கள்.

    இதுகுறித்து தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா நேற்று மாலை பத்திரியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து பேட்டி அளித்தார். அப்போது அவர் தேர்தலில் போட்டியிடுவது பற்றிப் பேசினார்.

    வலிகள் எனக்குப் புரியும்

    வலிகள் எனக்குப் புரியும்

    "நான் இதுவரை பதினெட்டு படங்களை தயாரித்திருக்கிறேன். 'பாகுபலி', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'கும்கி' போன்று இருபத்தெட்டு படங்களை தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்திருக்கிறேன். இதனால் ஒரு தயாரிப்பாளருக்கு ஏற்படும் சோதனையும், வேதனையும் தெரியும். ஒரு விநியோகஸ்தருக்கு ஏற்படும் சோகங்களும், இழப்புகளும், வலிகளும் எனக்குத் தெரியும்.

    விநியோகஸ்தர் சங்கம்

    விநியோகஸ்தர் சங்கம்

    விநியோகஸ்தர் சங்கம் என்ற ஒன்றை வைத்துக் கொண்டு , அங்கு விநியோகஸ்தர்களின் பிரச்சினையைப் பற்றி பேசாமல், ஒரிருவர் பலன் பெறவேண்டும் என்பதற்காக அந்த சங்கத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். விநியோகஸ்தர் சங்கம் அதற்குரிய கடமைகளோடு இயங்கவில்லை.

    புல்லுருவிகளின் சுயநலப்போக்கு

    புல்லுருவிகளின் சுயநலப்போக்கு

    நல்லவர்கள் மட்டுமே இடம்பெறவேண்டும் என்று நான் விரும்பும் ஃபெடரேசனிலும் இவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். அங்கு செயல்படும் ஒரு சில புல்லுருவிகளின் சுயநலப்போக்கு தடுக்கப்பட்டு, சுதந்திரமாக வியாபாரம் செய்பவர்கள் வந்து செல்லும் இடமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.

    தலைவர் பதவிக்கு போட்டி

    தலைவர் பதவிக்கு போட்டி

    இந்த காரணத்திற்காகவும், விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர்கள் நலத்திற்காகவும், அசோக்குமார் எடுத்தது போன்ற துயரமான முடிவை ஒருவர் மீண்டும் எடுக்காமல் இருப்பதற்காகவும் நான் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்.

    விதி இருப்பதால் ராஜினாமா

    விதி இருப்பதால் ராஜினாமா

    இந்த தேர்தலில் போட்டியிடவேண்டும் என்றால் வேறு எந்த அமைப்பிலும் எந்தவொரு பதவியிலும் இருக்கக்கூடாது என்ற விதி இருப்பதால், நான் தயாரிப்பாளர் சங்க பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறேன். இதைத் தவிர்த்து நான் பதவி விலகுவதற்கு வேறு எந்த காரணமும் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறேன்.

    நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போல

    நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போல

    விநியோகஸ்தர் சங்கத்தில் தனி அணி அமைத்து போட்டியிடுகிறேன். எனது அணியில் அனைவரும் புதுமுகங்கள். புது ரத்தம் பாய்ச்சுவது போல் புதிய அணியாக போட்டியிடுகிறோம். நடிகர் சங்க தேர்தலில் எப்படி புதிய அணி வென்று பதவிக்கு வந்ததோ, தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய அணி எப்படி வெற்றி பெற்று பதவியேற்றதோ அதே போல் விநியோகஸ்தர் சங்கத்திலும் மாற்றங்கள் உருவாகவேண்டும் எனப் போட்டியிடுகிறோம்.

    திட்டங்கள் வகுத்திருக்கிறோம்

    திட்டங்கள் வகுத்திருக்கிறோம்

    ஒரு படத்தின் தயாரிப்பாளருக்காவது அப்படத்தின் கதை தெரியும். ஆனால் விநியோகஸ்தர்கள் படக்குழுவினரை நம்பி முதலீடு செய்கிறார்கள். இதனால் அவர்களில் பெரும்பாலோர் நஷ்டமடைந்து சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களை மீண்டும் இந்த விநியோகத் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு என்னென்ன உதவிகள் செய்ய இயலும் என்பதை திட்டமிட்டிருக்கிறோம்.

    முதல் வாக்குறுதி

    முதல் வாக்குறுதி

    நாங்கள் கொடுக்கும் முதல் வாக்குறுதியே பஞ்சாயத்திற்கு வரும் எந்தப் படத்தையும் நாங்கள் விநியோகம் செய்யமாட்டோம். பஞ்சாயத்து தீர்க்கப்பட்டு, பாதிக்கப்பட்ட அந்த விநியோகஸ்தருக்கு நியாயம் கிடைப்பதற்கான பணியை மட்டுமே செய்யவிருக்கிறோம். இந்த வேலையை சரியாக உறுதியாக செய்துவிட்டாலே போதும் அனைத்து விநியோகஸ்தர்களும் நன்றாக இருப்பார்கள்.

    வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

    வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

    விரைவில் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து பிரச்சார கூட்டங்கள் நடைபெறவிருக்கிறது. அதில் பல நல திட்டங்களைப் பற்றிய அறிவிப்பு இடம்பெறவிருக்கிறது" என ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா பேசினார்.

    English summary
    K.E.Gnanavel Raja has resigned Secretary post in the Producers Council. He is contesting in Chennai, Chengalpet, Thiruvallur, Kanchipuram Distributors Association election. "We will not distribute any film facing issues, the first promise we make, and we will only do the task to get justice to the distributor of the victims." Gnanavel Raja said in a press meet.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X