twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'கடவுளுக்கு ஏது ஓய்வு'- டெண்டுல்கருக்கு பாலிவுட் புகழாரம்!

    By Shankar
    |

    மும்பை: தங்கள் மண்ணின் மைந்தனும், சாதனை வீரருமான சச்சின் டெண்டுல்கருக்கு பாலிவுட் பிரபலங்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

    கடவுளுக்கு ஏது ஓய்வு... என்றெல்லாம் அவரைப் புகழ்ந்துள்ளனர்.

    கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர், தனது 40வது வயதில் கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற நாளன்றே அவருக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருதும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

    சச்சின் டெண்டுல்கரின் மாபெரும் சாதனைகளை போற்றும் வகையில், அமிதாப் பச்சன் உள்ளிட்ட இந்தி நடிகர், நடிகைகள் தங்களது வாழ்த்து செய்திகளை ட்விட்டரில் பதிவு செய்தார்கள்.

    அமிதாப் பச்சன்

    அமிதாப் பச்சன்

    "சச்சினை வாழ்த்துகிறேன். அவரது ஈர்ப்பு திறனை இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்."

    ஷாரூக்கான்

    ஷாரூக்கான்

    "கடவுள் கொடுத்த இரு பரிசுகளையும் யாரும் இத்தனை சிறப்பாக பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். கிரிக்கெட் மூலம் வரலாற்றில் இடம்பிடித்தீர்கள்... தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறந்து விளங்கினீர்கள். இந்த இரண்டிலுமே சிகரம் தொட்டவர் நீங்கள்... லவ் யூ சச்சின்..."

    லதா மங்கேஷ்கர்

    லதா மங்கேஷ்கர்

    "சச்சின் மிகவும் அமைதியான மனிதர். யோசிக்காமல் மற்றவர்களுக்கு உதவுவதில் வல்லவர். அவரது இந்த ஓய்வு பெறும் முடிவை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன். அவரது சாதனைகளுக்காக பாராட்டுகிறேன். அவர் வாழ்வில் மென்மேலும் பல வெற்றிகள் பெற்று இன்னும் பல சாதனைகள் புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன்."

    அபிசேக் பச்சன்

    அபிசேக் பச்சன்

    "எங்களது சொந்த மண்ணில் பிறந்து இவ்வளவு சாதனைகளை தனதாக்கி கொண்ட உன்னத மனிதர் சச்சினுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்."

    அமீர் கான்

    அமீர் கான்

    "ரசிகர்களுக்காக சச்சின் அளித்த எல்லாவற்றுக்காகவும் நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம். சச்சினை போல வேறு எந்த ஒரு வீரரும் சாதிக்க முடியாது. அவரை மிகவும் நேசிக்கிறேன்."

    அனுபம் கெர்

    அனுபம் கெர்

    "கடவுளுக்கு ஏது ஓய்வு....? நன்றி சச்சின்!"

    பர்ஹான் அக்தர்

    பர்ஹான் அக்தர்

    "சச்சின் தெண்டுல்கர் ஓய்வு பெறுவதை நான் துரதிருஷ்டவசமாக நினைக்கவில்லை. ஏனெனில் அவர் ஆடிய பழைய ஆட்டங்களை என்னால் காண முடியும். இதை நினைத்து என்னை நானே தேற்றி கொள்வேன்."

    சானியா மிர்சா

    சானியா மிர்சா

    "மிகவும் உணர்வுப்பூர்வமாக இருக்கிறது... இந்த மொத்த தேசமும்.. மிஸ் யூ சச்சின்"

    நடிகை பிரீத்தி ஜிந்தா

    நடிகை பிரீத்தி ஜிந்தா

    "சச்சினை போல் ஒரு கிரிக்கெட் வீரரை நான் பார்த்ததும் இல்லை.. இனிமேல் பார்க்க போவதும் இல்லை.. என்னை கிரிக்கெட் ரசிகையாக மாற்றியதற்காக சச்சினுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்."

    பிரியங்கா சோப்ரா

    பிரியங்கா சோப்ரா

    "கிரிக்கெட் உலகின் பெரும் சகாப்தம் முடிந்தது... நன்றி சச்சின்!"

    ஸ்ரீ தேவி

    ஸ்ரீ தேவி

    "சச்சின் தெண்டுல்கரை போல் திறமை மிக்க வீரரை கிரிக்கெட் இனி சந்திக்க போவது இல்லை.. உலகின் தலைசிறந்த வீரரை நாம் இழந்துவிட்டோம்."

    அனுஷ்கா ஷர்மா

    அனுஷ்கா ஷர்மா

    "பெருந்தன்மை, பணிவு, உத்வேகம், கண்ணியம், நேர்மை. இந்த உணர்வுகளை ஒருபோதும் நான் வெளிப்படுத்தியது இல்லை. இதை விவரிப்பதும் கடினம். இந்த உணர்வுக்காக சச்சினுக்கு நன்றி!"

    ஸ்ரேயா கோஷல்

    ஸ்ரேயா கோஷல்

    "கடைசி தருணத்தில் அவரது பேச்சு என்னை அழ வைத்துவிட்டது.. தேங்ஸ் சச்சின்"

    English summary
    Celebrities including Amitabh Bachchan, Lata Mangeshkar, Aamir Khan, Sridevi, Abhishek Bachchan, Anupam Kher and many others took to Twitter to express their gratitude towards Tendulkar, 40, who brought the curtains down on his phenomenal career at the Wankhede Stadium here opposite West Indies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X