»   »  50-ம் ஆண்டில் எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளை... பொன்விழா எடுக்கும் ரசிகர்கள்!

50-ம் ஆண்டில் எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளை... பொன்விழா எடுக்கும் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அமரர் எம்ஜிஆரின் மிகப் பெரிய வெற்றிப் படங்களுள் ஒன்றான எங்க வீட்டுப் பிள்ளைக்கு பொன்விழா எடுக்கிறார்கள்.

வரும் மார்ச் 15-ம் தேதி இந்த விழாவினை நடத்த எம்ஜிஆரின் ரசிகர்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

எங்க வீட்டுப் பிள்ளை

எங்க வீட்டுப் பிள்ளை

எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடிக்க, நாகி ரெட்டியின் விஜயா மூவீஸ் தயாரித்து, வெற்றிகரமாக ஓடிய படம் 'எங்க வீட்டு பிள்ளை'. இதில் நாயகியாக சரோஜா தேவி நடித்து இருந்தார். நம்பியார், நாகேஷ், தங்கவேலு உள்பட பலரும் நடித்திருந்தனர். சாணக்யா இயக்கினார்.

இனிய பாடல்கள்

இனிய பாடல்கள்

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், கவிஞர் வாலி, ஆலங்குடி சோமு எழுதிய ‘‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், 'கண்களும் காவடி', 'குமரி பெண்ணின் உள்ளத்திலே' 'மலருக்கு தென்றல்', 'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்', 'பெண் போனால்' போன்ற பாடல்கள் இன்று கேட்டாலும் அத்தனை இனிமையானவை. 1965-ல் பொங்கலையொட்டி ஜனவரி 14-ம் தேதி வெளியான இப்படத்தை, அறுபது, எழுபதுகளில் பிறந்த யாரும் இந்தப் படத்தைத் தவறவிட்டிருக்க மாட்டார்கள்.

வசூல் மழை

வசூல் மழை

இந்தப் படம் பெரும் வசூலைக் குவித்து வெள்ளி விழா கண்டது அன்றைக்கு. சென்னையில் மூன்று அரங்குகளிலும், வெளியூர்களில் 15 அரங்குகளிலும் படம் நூறு நாட்கள் ஓடியது.

பொன்விழா

பொன்விழா

தற்போது இப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனதை விழாவாகக் கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். வருகிற 15-ந் தேதி தியாகராய நகரில் உள்ள சர்.டி.பி. தியாகராயர் அரங்கில் இவ்விழா நடக்கிறது.

சரோஜா தேவி

சரோஜா தேவி

இதில் ‘எங்க வீட்டு பிள்ளை' படத்தில் நடித்த சரோஜா தேவி, ரத்னா, பாடல்களை பாடிய பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் ராஜஸ்ரீ, சச்சு, ஜெயசித்ரா, ஷீலா, சி.ஐ.டி. சகுந்தலா, ஜெயந்தி, கண்ணப்பன் போன்றோர் பங்கேற்கின்றனர்.

English summary
Some of MGR's die hard fans are making arrangements to celebrate the golden jubilee function for the later's blockbuster movie Enga Veettu Pillai that turned 50 years of its release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil