»   »  வித்தியாசமான கெட்டப்பில் சமுத்திரக்கனி.. கோலிசோடா 2 டீஸர்!

வித்தியாசமான கெட்டப்பில் சமுத்திரக்கனி.. கோலிசோடா 2 டீஸர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'காதல்', 'தீபாவளி', வழக்கு எண் 18/9' ஆகிய படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கி, தயாரித்து கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த படம் 'கோலிசோடா'.

கோயம்பேடு மார்க்கெட்டில் வேலைபார்க்கும் சிறுவர்களின் வாழ்க்கையைப் பற்றிச் சொன்ன இந்தப் படம் ஹிட் அடித்தது.

மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ஹிட் அடித்ததன் காரணமாகத் தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் விஜய் மில்டன்.

இதிலும் புதுமுகங்கள் :

இதிலும் புதுமுகங்கள் :

முதல் பாகத்தைப் போலவே இந்தப் படத்திலும் புதுமுகங்களே நடிக்க இருக்கிறார்களாம். இந்தப் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் சமுத்திரக்கனி நடிக்கிறார்.

என்ன கதை :

என்ன கதை :

முதல் பாகத்தில் மார்க்கெட் தாதாவுடன் மோதி கெத்து காட்டிய சிறுவர்கள் இரண்டாம் பாகத்தில் கால்பந்து விளையாட்டின் மூலம் சாதிக்கிறார்களாம். மார்க்கெட் சிறுவர்களை வளரவிடக்கூடாது என சதி செய்யும் எதிரிகளை சிறுவர்கள் ஜெயிப்பதே இந்தப் படத்தின் கதை.

வித்தியாசமான ரோலில் சமுத்திரக்கனி :

சிறுவர்களை வழிநடத்தும் ஆசான் போலொரு கேரக்டரில்தான் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். இதற்காக நரைத்த தலையுடன், முதிய தோற்றத்தில் கெட்டப் போட்டு நடிக்கிறார்.

ஆடியோ டீஸர் :

ஆடியோ டீஸர் :

தற்போது இந்தப் படத்தின் ஆடியோ டீசரை ட்விட்டரில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் நேற்று வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி இந்த டீசருக்கு கெளதம் வாசுதேவ் மேனன் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்.

எப்போ ரிலீஸ்? :

எப்போ ரிலீஸ்? :

இந்த படத்துக்கு விஜய் மில்டனே ஒளிப்பதிவு செய்து தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். பரபரப்பாகப் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் இந்தப் படம் அடுத்த வருடம் ஜனவரிக்கு ரிலீஸாகும்.

English summary
Vijay Milton is producing and directing the film 'Golisoda' in 2014. He is taking the second part of the film. Actor Samuthirakani plays a different role in this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil