»   »  மூன்று வார 'டல்' முடிவுக்கு வந்தது... திரையரங்குகளில் மீண்டும் கூட்டம்... ஏன் தெரியுமா?

மூன்று வார 'டல்' முடிவுக்கு வந்தது... திரையரங்குகளில் மீண்டும் கூட்டம்... ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்று விஜய் சேதுபதி - விக்ரம் நடித்த விக்ரம் வேதா, ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த மீசைய முறுக்கு என இரு திரைப்படங்கள் வெளியாகின. இந்த இரு படங்களுக்குமே ரசிகர்களின் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

இதை இன்று திரையரங்குகளில் பார்க்க முடிந்தது. காலையில் தொடங்கிய முதல் காட்சியிலிருந்து இரவுக் காட்சி வரை சென்னை நகரில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. வெளியூர்களிலும் ஓரளவு நல்ல கூட்டம்.

Good crowd after 3 weeks in theaters

ஜிஎஸ்டி பிரச்சினையால் டிக்கெட் விலைகள் தாறுமாறாக உயர்த்தப்பட்டதால், ரசிகர்கள் கடந்த இரு வாரங்களாக தியேட்டர்களைப் புறக்கணித்து வந்த நிலையில், இந்த இரு படங்களையும் பார்க்க திரண்டு வந்துள்ளது திரையுலகினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக இணைந்துள்ளார் மாதவன். இரட்டை இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கியுள்ளனர்.

மீசையமுறுக்கு படத்தில் இசையமைப்பாளர் ஆதி இயக்குநராகவும் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளார். சுந்தர் சி தயாரிப்பு இது.

இரு படங்கள் குறித்த 'இன்டஸ்ட்ரி டாக்' பாசிடிவாக இருப்பதுதான் இந்த அளவு மக்கள் பார்க்கக் காரணம் என்கிறது பாக்ஸ் ஆபீஸ்.

English summary
Today's release Meesaiya Murukku and Vikram Vedha are getting good crowd in theaters.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil