»   »  விவேகம்: தல ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி

விவேகம்: தல ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் படத்தின் டீஸரை வெளியிடும் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளார்களாம்.

சிவா இயக்கத்தில் அஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வரும் படம் விவேகம். காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன், விவேக் ஓபராய் உள்ளிட்டோரும் நடித்து வருகிறார்கள்.

Good news for Ajith fans

படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சுமார் 25 நாட்கள் நடக்க உள்ளதாம். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கே செம வரவேற்பு இருந்தது. இந்நிலையில் டீஸர் வெளியீடு தேதியை விரைவில் அறிவிக்க உள்ளாராம் சிவா.

படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ள கவலையில் உள்ள ரசிகர்களுக்கு இந்த செய்தி ஆறுதல் அளிக்கும். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜீத் சிக்ஸ் பேக் வைத்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில் டீஸருக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Ajith's Vivegam teaser release date will be announced soon it seems.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil