twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்று இசை மேதை ஆர் டி பர்மன் பிறந்த நாள்... கவுரவித்த கூகுள்!

    By Shankar
    |

    மறைந்த பாலிவுட் இசை மேதை ஆர் டி பர்மன் எனும் ராகுல்தேவ் பர்மனின் 77-வது பிறந்த நாளை இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு டூடுள் மூலம் இன்று கொண்டாடி வருகிறது.

    இந்திப் படவுலகில் 1970-80 ஆண்டுகளில் இசை சாம்ராஜ்ஜியம் நடத்திய ஆர்.டி.பர்மன் என்னும் ராகுல்தேவ் பர்மன் சுமார் 330 படங்களுக்கு இசையமைத்தவர். இந்திய திரையிசையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் என்றால் மிகையல்ல.

    தமிழகத்திலும்

    தமிழகத்திலும்

    தனது காலத்தால் அழிக்க முடியாத திரை இசை மெட்டுகளால் கோடானுக்கோடி இந்தியர்களின் இதயங்களில் நீங்காத இடம்பிடித்துள்ளார். இந்தியா முழுவதுமே இவரது இசையில் கட்டுண்டு கிடந்த காலம் அது.

    தமிழ் நாடெங்கும் எழுபதுகளில் இவரது இந்திப் பாடல்கள்தான் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தன.

    இந்தி தவிர, வங்காளம், தமிழ் படங்களுக்கும் பர்மன் இசையமைத்துள்ளார்.

    மெஹபூபா...

    மெஹபூபா...

    ஆர்டி பர்மனின் தனித்துவம் மிக்க குரலுக்கு பல கோடி ரசிகர்கள் உண்டு. இன்றும் அவர்கள் பர்மனைக் கொண்டாடி வருகின்றனர்.

    இவரது குரலில் வெளியான ‘ஷோலே' படத்தின் ‘மெஹபூபா ஓ மெஹபூபா' பாடல் இந்தியாவின் பட்டித்தொட்டிகளில் வாழ்ந்த மக்களைக் கூட கூத்தாட வைத்தது.

    தி ட்ரெயின் படத்தில் இடம்பெற்ற மேரிஜான் மெய்னே கஹான்... இன்றும் க்ளப்களில் ஹாட் பாட்டு.

    சனம் தேரி கஸம் படத்தில் ஜானா ஓ மெரி ஜானா... என்ற பாட்டு இப்போது கேட்டாலும் ஆட வைக்கும்.

    ராஜேஷ் கன்னாவுடன்

    ராஜேஷ் கன்னாவுடன்

    ஆர் டி பர்மன் இசையில் வெளியான பல படங்களின் இசைத் தட்டுகள் விற்பனையில் சாதனைப் புரிந்தவை.

    நடிகர் ராஜேஷ் கண்ணாவின் 40 படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்த இவரை இந்திப்பட உலகினர் ‘பஞ்சம்தா' என்று அழைக்கின்றனர்.

    ஆஷா போஸ்லே

    ஆஷா போஸ்லே

    பிரபல பாடகி ஆஷா போஸ்லேவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ஆர் டி பர்மன், அவருடன் இணைந்து உருவாக்கிய பாடல்கள் அமரத்துவம் மிக்கவை. லதா மங்கேஷ்கருக்கு ஏராளமான ஹிட் பாடல்களைத் தந்த ஆர் டி பர்மன், ஆஷா போஸ்லேவுக்கு பல சவாலான பாடல்களைக் கொடுத்தார்.

    இஜ்ஜாஸத்

    இஜ்ஜாஸத்

    ஆஷா போஸ்லேவும் ஆர்டி பர்மனும் இணைந்து உருவாக்கிய இஜ்ஜாஸத் இசை ஆல்பம் இன்றும் மிகச் சிறந்த க்ளாஸிக் என்று புகழப்படுகிறது. அதில் இடம்பெற்ற கத்ரா கத்ரா... உள்ளிட்ட பாடல்கள் மிக இனிமையானவை.

    77வது பிறந்த நாள்

    77வது பிறந்த நாள்

    இன்று ஆர்டி பர்மனின் 77 வது பிறந்த நாள். தனது 54 வது வயதில் ஜனவரி 4, 1994-ல் மாரடைப்பால் மரணத்தைத் தழுவினார் ஆர் டி பர்மன். இந்திய சினிமாவில் உண்மையான பேரிழப்பு அதுதான்.

    கூகுள்

    கூகுள்

    ஆர்டி பர்மன் இறந்துவிட்டாலும், அவரது பாடல்கள் இன்றும் சிரஞ்சீவியாக மக்கள் மனதில் நிலைத்துவிட்டன. இன்று உலகின் எந்தப் பகுதியில் இந்தி சினிமா இசை ஒலித்தாலும், அங்கு ஆர் டி பர்மனின் பாடல் இல்லாமலிருக்காது.

    இன்று அவரது பிறந்த நாளை, அவரது புகைப்படம் கொண்ட ‘டூடுல்' மூலம் ‘கூகுள்' கொண்டாடி பெருமைப்படுத்தியுள்ளது.

    English summary
    Google is celebrating Music Maestro R D Burman's 77th birthday with special Doodle.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X