twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகை நர்கீஸ் பிறந்த நாள்.. கொண்டாடும் கூகுள் டூடுல்!

    By Shankar
    |

    இந்தியாவின் மிகச் சிறந்த நடிகைகளுள் ஒருவராகக் கொண்டாடப்படும் நர்கீஸின் பிறந்த நாளை இன்று டூடுலில் வெளியிட்டு கொண்டாடுகிறது கூகுள்.

    'பத்மஸ்ரீ' விருது பெற்ற முதல் இந்தி நடிகை, முதன்முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்திய திரைப்படமான 'மதர் இந்தியா' வில் நடித்தவர், என ஏகப்பட்ட பெருமைகளுக்குச் சொந்தக்காரர் நர்கீஸ்.

    86வது பிறந்த நாள்

    86வது பிறந்த நாள்

    இன்று அவருக்கு 86வது பிறந்த நாளாகும். இந்த நாளைக் கொண்டாடும் வகையில் கூகுள் தனது டூடுல் சேவைக்கான இடத்தில் நர்கீசின் அழகிய புகைப்படம் ஒன்றை வைத்து திரைத்துறையில் அவரது பங்களிப்பை நினைவு கூர்ந்துள்ளது.

    தமன்னாவில் அறிமுகம்

    தமன்னாவில் அறிமுகம்

    1929-ம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி பிறந்தவர் நர்கீஸ் தத். 1935 ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமான இவர், கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் தமன்னா.

    சுனில் தத்

    சுனில் தத்

    1957-ல் மதர் இந்தியாவில் நடித்தபோது, உடன் நடித்த சுனில் தத்தை காதலித்து மணந்தார். அதன் பிறகு படங்களில் நடிப்பதைத் தவிர்த்தார். சஞ்சய் தத், நம்ரதா தத், ப்ரியா தத் என மூன்று குழந்தைகளைப் பெற்றார்.

    தேசிய விருது

    தேசிய விருது

    திருமணத்திற்குப் பிறகு அரிதாகவே நடித்தார். அப்படி நடித்து வெளிவந்த 'ராத் ஆர் தின்' படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றார் நர்கீஸ்.

    கணையப் புற்று நோய்

    கணையப் புற்று நோய்

    தன் இறுதிக்காலத்தில் கணையப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் 1981-ஆம் ஆண்டு மே 3-ம் தேதி மரணமடைந்தார். இந்திய அரசாங்கம் இவரது பெயரில் "சிறந்த தேச ஒருமைப்பாட்டிற்கான" தேசிய திரைப்பட விருதினை வழங்கி வருகிறது.

    English summary
    Google today paid tribute to yesteryear actress Nargis Dutt on her 86th birthday by a commemorative logo on its homepage.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X