அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு வெளிநாடு செல்கிறது கூகுள் குட்டப்பன் படக்குழு

சென்னை : இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் கூகுள் குட்டப்பன் படம் பிரபல மலையாள திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் தமிழ் ரீமேக் ஆகும்.

பிக் பாஸ் தர்ஷன் மற்றும் லாஸ்ஸியா இணைந்து நடித்து வரும் கூகுள் குட்டப்பன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

கடந்த சில மாதங்களாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வர இப்பொழுது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு வெளிநாடு செல்ல உள்ளது.

முதியவருக்கும் ரோபோவுக்கும்

முதியவருக்கும் ரோபோவுக்கும்

இயல்பான கதைகளுக்கு மட்டுமல்லாமல் வித்தியாசமான திரைப்படங்களுக்கும் பேர் போன மலையாள சினிமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25. இதில் நடிகர் சுபின் ஷாஹிர் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து இருக்க, வயதான முதியவருக்கும் ரோபோவுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மிக அற்புதமாக காட்டியிருந்த இந்த திரைப்படம் ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வெற்றி பெற்றது. பொதுவாக கமர்ஷியல் மசாலாக்கள் இல்லாத இயல்பான கதைகள் மலையாள சினிமாவில் வெளியாகிக் கொண்டிருக்கும் அதேசமயம் வித்தியாசமாக வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபீஸை கலக்கியது. இந்நிலையில் இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டது. அதன் படி இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றி இருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் சில முக்கிய காட்சிகள் கேரளாவில் எடுக்கப்பட்டது. ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் சாயல் மாறாமல் இருக்க கேரளாவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக கூறப்பட்டன. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

ஹீரோயினாக லாஸ்லியா

ஹீரோயினாக லாஸ்லியா

இந்நிலையில் தமிழில் இப்படத்திற்கு கூகுள் குட்டப்பன் என டைட்டில் வைக்கப்பட்டிருக்க சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் மிகவும் வயதான தோற்றத்தில் கச்சிதமாக கதாபாத்திரத்திற்கு பொருந்தி இருக்க ரோபோவுடன் காட்டுக்குள் இருக்கின்றவாறு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளர்களாக களமிறங்கி கலக்கிய தர்ஷன் மற்றும் லாஸ்லியா இறுதியில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் ரசிகர்களின் ஃபேவரைட் போட்டியாளர்களாக மாறினர். இருவரும் இலங்கையில் இருந்து வந்திருந்தாலும் பிக் பாஸ் போட்டியில் மிக சிறப்பாக விளையாடி ரசிகர்கள் மனதில் வெற்றியாளர்களாக மகுடம் சூடினர். லாஸ்லியா பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போதே கேஎஸ் ரவிக்குமார் தன்னுடைய அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்க வைப்பதாக அறிவித்திருந்தார். அறிவித்தபடியே இப்பொழுது கூகுள் குட்டப்பன் படத்தில் லாஸ்லியாவை கதாநாயகியாக நடிக்க வைத்துள்ளார். லாஸ்லியாவைத் தொடர்ந்து பிக் பாஸ் தர்ஷன் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் போட்டியாளர்களாக இருந்த தர்ஷன் மற்றும் லாஸ்லியா இருவரும் இணைந்து கூகுள் குட்டப்பன் படத்தில் நடிப்பதால் இப்படத்திற்கு வேறலெவல் எதிர்பார்ப்பு உள்ளது.

கூகுள் குட்டப்பன்

கூகுள் குட்டப்பன்

இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தன் சொந்த தயாரிப்பில் கூகுள் குட்டப்பன் படத்தை தயாரிக்க அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மாற்றம் சரவணன் இணைந்து இந்த திரைப்படத்தை இயக்கி வருகின்றனர். தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு படப்பிடிப்பு விறு விறு வேகத்தில் நடைபெற்று கொண்டுள்ளது. முதல் கட்டமாக கேரளா மற்றும் தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு உள்ளது. மேலும் இதில் மனோபாலா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். காமெடி கலாட்டாவில் உருவாகி வரும் இப்படத்தில் கே எஸ் ரவிக்குமாரின் வேடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு விரைவில் ரஷ்யா செல்ல உள்ளது.

ரஷ்யாவில் படப்பிடிப்பு

ரஷ்யாவில் படப்பிடிப்பு

ரஷ்யாவில் சில முக்கியமான இடங்களில் பாடல்கள் மற்றும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. எனவே தர்ஷன்,கேஎஸ் ரவிக்குமார் மற்றும் லாஸ்லியா என முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் ரஷ்யாவிற்கு விரைவில் செல்ல உள்ளனர். ஓரிரு வாரங்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு மீண்டும் தமிழ்நாட்டில் படப்பிடிப்பைத் தொடர படக்குழு திட்டமிட்டுள்ளது . மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். மலையாளத்தில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் தமிழிலும் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் படப்பிடிப்பை விரைவிலேயே முடித்துவிட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸ் செய்ய படக்குழு தயாராகிக் கொண்டுள்ளது. கூகுள் கூட்டப்பனை தொடர்ந்து லாஸ்லியா ஃபிரெண்ட்ஷிப் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் . தர்ஷன் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவும் கமிட்டாகி உள்ளார். ஆரம்பத்திலேயே தமிழ் ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ள தர்ஷன் மற்றும் லாஸ்லியா தமிழ் சினிமாவில் தங்களுக்கென தனி இடத்தை பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X