»   »  'அறம்' இரண்டாம் பாகம் இப்போதைக்கு இல்லை - கோபி நயினார்

'அறம்' இரண்டாம் பாகம் இப்போதைக்கு இல்லை - கோபி நயினார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில், கோபி நயினார் இயக்கத்தில் வெளியான படம் 'அறம்'.

இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. வர்த்தக ரீதியாகவும் நல்ல வசூலைக் குவித்தது.

அடுத்து, அறம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் எனக் கூறப்பட்ட நிலையில், இப்போதைக்கு அறம் 2 எடுக்கும் திட்டம் இல்லை எனக் கூறியுள்ளார் கோபி நயினார்.

அறம்

அறம்

நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் அதிகார வர்க்கத்தினருக்கும், கடைக்கோடியில் இருக்கும் ஒரு கிராமத்து மனிதர்களுக்குமிடையேயான அரசியலைப் பேசியது. நீரை மையமாக வைத்து அரசியல் பேசிய இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அறம் 2?

அறம் 2?

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை, கலெக்டரான நயன்தாரா காப்பாற்றப் போராடுவதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தின் தொடர்ச்சியாக அறம் 2 இயக்கப்படும் என்ற செய்திகள் வெளியானது. இதிலும் நயன்தாராவே நடிப்பதாவும் கூறப்பட்டது.

உண்மை இல்லை

உண்மை இல்லை

ஆனால், கோபி நயினார் அடுத்து 'அறம் 2' படத்தை இயக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். இது குரித்து மேலும் அவர் கூறியதாவது, 'என்னுடைய அடுத்த படம் பற்றி வெளியாகும் தகவல்களில் உண்மை கிடையாது.

அறம் 2 இப்போதைக்கு இல்லை

அறம் 2 இப்போதைக்கு இல்லை

எனது அடுத்து படம் நிச்சயம் அறம் படத்தின் இரண்டாம் பாகம் கிடையாது. ஆனால், அறம் போலவே சமூகக் கருத்துகள் நிறைந்த படத்தைத்தான் இயக்க இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கோபி நயினார் தற்போதைக்கு அறம் 2 படத்தைக் கைவிட்டுள்ளார் எனத் தெரிகிறது.

அடுத்த படம்

அடுத்த படம்

அடுத்து ஜி.வி.பிரகாஷை வைத்து படம் இயக்கப்போவதாக வந்த தகவல் உண்மையா எனத் தெரியவில்லை. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் விரைவில் அது குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Read more about: gopi nainar aramm அறம்
English summary
Lady Superstar Nayanthara's 'Aramm' film was well received among the people. Next, as the second part of 'aramm' film is said to have been produced, there is no plan to take 'Aramm 2', Gopi nainar said.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil