»   »  நயன்தாரா பாத்திரத்துக்கு மதிவதனி எனப் பெயரிட்டது ஏன்? - கோபி நயினார் Exclusive

நயன்தாரா பாத்திரத்துக்கு மதிவதனி எனப் பெயரிட்டது ஏன்? - கோபி நயினார் Exclusive

Posted By:
Subscribe to Oneindia Tamil

அறம் செய்தியாளர் காட்சி முடிந்ததும், வெளியில் நின்று எல்லோருக்கும் கைக் கொடுத்துக் கொண்டிருந்த இயக்குநர் கோபி நயினாருக்கு எல்லோரும் வாழ்த்துகள் சொன்னார்கள். ஒரு செய்தியாளர் உணர்ச்சி வசப்பட்டு கோபிக்கு முத்தமே கொடுத்தார்.

நாமும் கைக் கொடுத்து வாழ்த்திவிட்டு கீழிறங்கி வந்தோம். சிறிது நேரம் கழித்து கோபி வெளியில் வந்தார்.

Gopi Nayinaar's explanation for Nayanthara character name in Aramm

அவ்வளவு நேரமும் மனதில் சுழன்று கொண்டிருந்தது, படத்தின் பாத்திரங்களுக்கு வைக்கப்பட்ட பெயர்கள். குறிப்பாக நயன்தாரா பெயர். கோபியிடம் அதைக் கேட்டோம்.

Gopi Nayinaar's explanation for Nayanthara character name in Aramm

"நீங்க நினைக்கிற அதே காரணத்துக்காகத்தான் மதிவதனின்னு நயன்தாரா பாத்திரத்துக்கு வைத்தேன். ஆம்... தலைவர் பிரபாகரனின் துணைவியாரின் பெயரை விட அந்தப் பாத்திரத்துக்கு பொருத்தமான பெயர் இருக்காது. இந்த உலகில் அவரைப் போன்ற தைரியசாலியை, தியாகியைப் பார்க்க முடியுமா? இந்த இனத்துக்காக தங்கள் குடும்பத்தையே தியாகம் செய்தவரல்லவா...

Gopi Nayinaar's explanation for Nayanthara character name in Aramm

புலேந்திரன் என்பது அந்த மண்ணுக்கே உரிய பெயர். தங்கையைக் காப்பாற்றும் சிறுவனுக்கு முத்து என்று பெயர் வைத்தேன். அது தன் இனத்துக்காக இன்னுயிரை ஈந்த தம்பி முத்துக்குமாரின் பெயர். முத்துக்குமாருக்கு நான் செலுத்தும் மரியாதை அது. செயற்கரிய செயலைச் செய்தவர்களைப் போற்றும் வகையில் வைத்த பெயர்," என்றார்.

English summary
Aramm director Gopi Nayinaar says that he chosen Mathivathani name for Nayanthara charector to gloryfy LTTE leader Prabhakaran's wife.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil