»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil
ஏ.எம். ரத்னம் தயாரிக்க இருந்து இப்போது பி.எல். தேனப்பன் தயாரிக்கும் படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடிக்கிறார் கோபிகா.

விகடன் குழுமத்தில் போட்டோகிராபராக பணியைத் துவக்கி, பி.சி. ஸ்ரீராம் என்ற பல்கலைக்கழகத்தில் ஒளிப்பதிவு கற்றுசினிமட்டோகிராபியில் இந்தி, தமிழ், தெலுங்கு என தேசிய அளவில் கலக்கிக் கொண்டிருக்கும் கே.வி. ஆனந்த் தான் இந்தப் படத்தைஇயக்கப் போகிறார்.

படத்தின் பெயர் கனாக் கண்டேன். கே.வி.ஆனந்த்- ஸ்ரீகாந்த்- கோபிகா மூன்று வெற்றியாளர்கள் ஒரே குடையின் கீழ் வருவதால் இந்தப்படத்துக்கு கோலிவுட்டில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

கதை ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராம். கிரைம் நாவலாசிரியர்களான இரட்டையர்கள் சுபா தான் கதையை எழுதியிருக்கிறார்கள். கதைக்குஸ்கிரிப்ட் எழுதி ஆனந்த் இயக்குகிறார்.

சென்னையில் தான் முழு படப்பிடிப்பும். பாடல் காட்சிகளை இமயமலையின் லடாக் பள்ளத்தாக்குப் பகுதிகளில் படம் பிடிக்கஇருக்கிறார்களாம். படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கப் போவது ஆனந்த் அல்ல, செளந்தர்ராஜன்.

இந்தப் படத்தின் மூலம் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த பிரிதிவிராஜ் (மீரா ஜாஸ்மீனுடன் கொஞ்ச காலம் கிசுகிசுக்கப்பட்டவர்) முதல்முறையாக தமிழுக்கு அறிமுகமாகிறார்.

ஏவி.எம் ஸ்டுடியோவில் நடந்த படத்தின் பூஜை மிக கலர்புல்லாக இருந்தது. கே.வி.ஆனந்தின் குரு பி.சி.ஸ்ரீராம் முதல் ஆளாக வந்து நின்றுபூஜைக்குத் தலைமை தாங்கினார். தனது அசிஸ்டெண்ட் டைரக்டராவதில் அவருக்கு ஏக மகிழ்ச்சியாம்.

படத்துக்கு இசை வித்யாசாகர். பாடல்களை எழுதுவது கவியரசு வைரமுத்து.

ஷங்கரின் பல படங்களுக்கு ஒளிப்பதி செய்தவர் கே.வி. ஆனந்த் என்பதால் அந்நியன் சூட்டிங்கின் படு பிஸி ஷெட்யூலுக்கு மத்தியிலும்வந்திருந்து வாழ்த்தினார் ஷங்கர். நடிகை சதா, கிரிக்கெட் வீரர் பாலாஜி என பல தரப்பினரும் வந்து பட பூஜையை பரபரப்பாக்கினர்.

படத்தின் நாயகியான கோபிகாவின் கால்ஷீட் படு டைட்டாம். தமிழில் 2 படங்கள், தெலுங்கில் 3 படங்கள், மலையாளத்தில் ஒன்று,கன்னடத்தில் ஒன்று என ஒரே நேரத்தில் 7 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் காட்டியே தீர வேண்டும் என்பதால்கவர்ச்சியில் கலக்குகிறார்.

தமிழுக்கு வரும்போது மடிசார் கட்டாத குறை தான்.. அம்புட்டு வெட்கம் காட்டுகிறார். தெலுங்கில் இன்னும் கொஞ்சம் கிளாமர் காட்டவேண்டும் என்று நச்சரிப்பதால் புதிய தெலுங்குப் படங்களை ஒப்புக் கொள்வதை தவிர்க்கவே ஆரம்பித்துவிட்டதாக சொல்கிறார் கோபிகா.

அதே நேரத்தில் தமிழில் அதிக படங்களை ஒப்புக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார். தனுசுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், சேரனின் ட்ரீம்ஸ்தியேட்டர்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் பிரசன்னாவுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கப் போகிறார்.

சேரன் தயாரிக்கும் படத்தை இயக்கப் போவது ஆட்டோகிராஃப் படத்தில் கேரள போர்ஷன்களை ஒளிப்பதிவு செய்த விஜய் மில்டன்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil