»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil
ஸ்ரீகாந்த் மற்றும் கோபிகா நடித்துள்ள கனா கண்டேன் பட விளம்பர பேனர் மிகவும் ஆபாசமாக இருப்பதாகஎதிர்ப்பு கிளம்பியதையடுத்து அந்த பேனரை போலீஸார் அகற்றினர்.

கனா கண்டேன் படத்தில் கோபிகா சற்றே கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.

ஸ்ரீகாந்த்தும், கோபிகாவும் ஒரு பாடலில் மிகவும் நெருக்கமாக நடித்துள்ள போஸ்கள் அடங்கிய பிரமாண்டமானபேனர், ஒன்று சென்னை அண்ணா சாலை சபையர் தியேட்டருக்கு எதிரே, வைக்கப்பட்டுள்ளது.

இந்த பேனரில், ஸ்ரீகாந்த்தின் தாடையை கோபிகா கடிப்பது போல காட்சி உள்ளது.

இந்தப் பேனர் ஆபாசமாக இருப்பதாக கூறி பெண்கள், பொதுமக்களிடமிருந்து போலீஸாருக்கு புகார்கள்சென்றன. மேலும், அப்பகுதியில் பெண்கள் பள்ளிகள் இருப்பதாலும், மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாலும்,இந்த பேனரை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

படத் தயாரிப்பாளர் தேனப்பனுக்கும் இதுதொடர்பாக மிரட்டலுடன் கூடிய கோரிக்கைகள் சென்றதால் பேனரைஅகற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று பிற்பகல் பேனரை போலீஸார் அப்புறப்படுத்தினர்.

Read more about: chennai, tamil, nadasha, jayalalitha
Please Wait while comments are loading...