»   »  கோரக்பூர் கொடூரம் என் இதயத்தை நொறுக்கியது: ஜி.வி. பிரகாஷ்

கோரக்பூர் கொடூரம் என் இதயத்தை நொறுக்கியது: ஜி.வி. பிரகாஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோரக்பூரில் பலியான 63 குழந்தைகளின் பெற்றோருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் நடிகர் ஜி.வி. பிரகாஷ்.

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

Gorakhpur tragedy saddens GV Prakash

இது குறித்து நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் கடந்த 5 நாட்களில் பச்சிளம் குழந்தைகள் 63 பேர் மரணமடைந்துள்ள செய்தி என் இதயத்தை நொறுக்கியது!

ஈன்ற பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Actor cum music director GV Prakash expressed his condolences to the 63 families that lost their children in Gorakhpur.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil