»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகர் கவுண்டமணி பழையபடி பயங்கரமாக லொள்ளு பண்ண ஆரம்பித்து விட்டார்.

நடிகர் ரஜினிகாந்த்துடன் சேர்ந்து அவர் நடித்து சமீபத்தில் வெளியான "பாபா"வில் அவரது காமடி கொஞ்சம் பரவாயில்லை என்ற பேச்சு அடிபடஆரம்பித்ததுமே கவுண்டமணி ஆட ஆரம்பித்து விட்டார்.

"பாபா"வில் நடித்த நிேரம், கவுண்டமணிக்கு இப்போது நிறைய படங்கள் கைவசம் உள்ளன.

தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம், "என்னய்யா திடீர்னு என்னப் பாக்க வர்றீங்க. ஏன், விவேக்கும் வடிவேலுவும் அத்து விட்டுட்டாங்களா?"என்று நக்கலாகவும் கேட்கிறார்.

மறுபடியும் படங்கள் வருவதை நினைத்து சந்தோஷப்படுவதை விட்டு விட்டு, வருகிற தயாரிப்பாளர்களை நோக வைக்கிறாரே கவுண்டமணி என்று அவரிடம்போய் "பாட்டு" வாங்கி வந்த தயாரிப்பாளர்கள் எரிச்சலுடன் புலம்புகிறார்களாம்.

யார் புலம்பினால் எனக்கென்ன என்ற ரேஞ்ச்சில் தனக்கே உரிய கிண்டல் தொணியில் எல்லோரையும் "வாரு வாரு" என்று வாரி வருகிறார்கவுண்டமணி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil