»   »  அட அதை ஏம்பா கேக்குற... நாம உயிரோட இருக்கிறது புடிக்கல போலிருக்கு.. கோபத்தில் கவுண்டமணி

அட அதை ஏம்பா கேக்குற... நாம உயிரோட இருக்கிறது புடிக்கல போலிருக்கு.. கோபத்தில் கவுண்டமணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும் மூத்த நடிகர் நடிகைகள் குறித்து தொடர்ந்து மோசமான வதந்திகள் பரவுவது தொடர்கிறது.

சமீபத்தில் மூன்று முறை நடிகை கே ஆர் விஜயா உடல்நிலைக் குறித்து தவறான தகவல்கள் பரவின. கேரளாவில் நலமாக இருக்கும் அவர், இந்த வதந்திகளுக்கு பதில் சொல்லியே சோர்ந்து போனார்.

'என் மரணச் செய்தியை இப்படி முன்கூட்டியே அறிவிப்பதில் இவங்களுக்கு அப்படி என்னதான் சந்தோஷமோ?' என ஆற்றாமையுடன் கேட்டார், போனில் விசாரித்த நம்மிடம்.

Goundamani denied rumours on his health

அடுத்து 'எவர்கிரீன் காமெடி சூப்பர் ஸ்டார்' கவுண்டமணி பற்றி.

ஏற்கெனவே ஒரு முறை அவரது உடல் நிலை குறித்து தவறாக செய்தி வெளியாகி, பின்னர் அதற்கெல்லாம் கவுண்டமணியே மறுப்பும் தெரிவித்தார்.

இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் அதே வதந்தி. இதுகுறித்து அவரிடம் தயங்கித் தயங்கி விசாரித்தால், 'அட அதை ஏம்பா கேக்குற... நாம நல்லபடியா உயிரோட இருக்கிறது புடிக்கல போலிருக்கு,' என்றார் கடுப்புடன்.

இதுகுறித்து அவருடைய மக்கள் தொடர்பாளர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "அவ்வப்போது நடிகர் கவுண்டமணி குறித்து புரளி கிளப்பிவிடுபவர் யார் என்று தெரியவில்லை. சற்று முன்புதான் அவரைச் சந்தித்தேன். புதிய படத்தில் நடிப்பதற்காக கதைகளைக் கேட்டு வருகிறேன். விரைவில் புதிய படத்தின் அறிவிப்பு வெளிவரும். அப்படத்தின் துவக்கவிழாவில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன் எனக் கூறினார். எனவே, அவருடைய ரசிகர்கள் பதற்றமடைய வேண்டாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

அட புரளிவாண்களே... இந்த மாதிரி வதந்திகளைப் பரப்பி நீங்க என்னதான் சாதிக்கப்போறீங்க?

English summary
Ace Comedian Goundamani has denied rumours about his health.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil