»   »  நெருப்புடா.. கவுண்டர் கலக்கல்டா... முடியுமா... இந்த ‘கபாலி’ டீசர் பார்த்துட்டீங்களா?

நெருப்புடா.. கவுண்டர் கலக்கல்டா... முடியுமா... இந்த ‘கபாலி’ டீசர் பார்த்துட்டீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியின் கபாலி டீசரை, கவுண்டமணியை வைத்து டிரோலிங் செய்துள்ளனர் நெட்டிசன்கள்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கபாலி. இதில் மலேசிய டான் ஆக நடித்துள்ளார் ரஜினி.


அடுத்தமாதம் ரிலீசாகவுள்ள இப்படத்தின் டீசர் கடந்த மாதம் முதல் தேதி வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்டு சாதனை புரிந்தது.


கபாலிடா...

கபாலிடா...

சட்டசபைத் தேர்தல் சமயமான அப்போது கபாலி பட டீசரை வைத்து திமுக விளம்பரம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல், கேரளாவில் உம்மன்சாண்டியை வைத்தும் கபாலி விளம்பரம் வெளியானது.


நெருப்புடா...

நெருப்புடா...

அதேபோல், அந்த டீசரில் இடம் பெற்றிருந்த, ‘நெருப்புடா, மகிழ்ச்சி' போன்ற வார்த்தைகளும் வைரல் ஆனது. அப்பட மியூசிக்கும் பிரபலமானது.


கவுண்டமணிடா...

கவுண்டமணிடா...

இந்நிலையில், இந்த கபாலி டீசரில் கவுண்டமணியின் பிரபலமான காமெடிக் காட்சிகளை இணைத்து டிரோலிங் ஆக்கியிருக்கிறார்கள் குறும்புக்கார நெட்டிசன்கள். கடந்தமாதம் உருவாக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது பேஸ்புக்கில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.


கொஞ்சம் சிரிங்க பாஸ்...

டயலாக்குகளுக்கு தகுந்தவாறு சரியாக கவுண்டமணியின் காமெடிக் காட்சிகளைத் தொகுத்து இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. நீங்களும் பார்த்துக் கொஞ்சம் சிரியுங்களேன்.


English summary
Netizens have released a troll video of Rajini's Kabali teaser using comedy actor Goundamani.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil