»   »  எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது... அடங் கொக்க மக்கா இது கவுண்டமணியின் அடுத்த படத்தலைப்புங்கோ!

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது... அடங் கொக்க மக்கா இது கவுண்டமணியின் அடுத்த படத்தலைப்புங்கோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கவுண்டமணி அடுத்து நடிக்கும் படத்திற்கு ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' என்ற வித்தியாசமான தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் கவுண்டமணி. இவரும், செந்திலும் கூட்டணி போட்டு படங்களில் அடித்த லூட்டிகளை இப்போது பார்த்தாலும் சிரித்து சிரித்து வயிறு வலித்து விடும். வாழைப்பழ காமெடியே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

நகைச்சுவை நடிகராக வலம் வந்த கவுண்டமணி, இடையில் சில காலம் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். பின்னர் ' வாய்மை ', ‘49 ஓ' என்ற படங்களின் மூலம் கவுண்டமணி மீண்டும் நடிக்கவந்தார். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' என்ற புதிய படத்தில் நடிக்க கவுண்டமணி ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநர் சுசீந்திரனிடம் உதவியாளராக இருந்த கணபதி பாலமுருகன் இந்தப் படத்தை இயக்குகிறார். முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக உள்ளது.

கேரவன் உரிமையாளர்...

கேரவன் உரிமையாளர்...

இப்படத்தில் படப்பிடிப்பு தளத்தில் பயன்படுத்தும் கேரவனை வாடகைக்கு விடும் தொழிலதிபர் கதாபாத்திரத்தில் கவுண்டமணி நடிக்கிறார் .

சுவாரஸ்ய சம்பவங்கள்...

சுவாரஸ்ய சம்பவங்கள்...

சென்னையில் இருந்து மதுரை வரை செல்லும் பயணத்தின் சுவாரஸ்ய சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

மற்ற நடிகர்கள் தேர்வு...

மற்ற நடிகர்கள் தேர்வு...

ஜெயராம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஜெ. சண்முகம் இப்படத்தைத் தயாரிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

அடுத்த மாதம் ஷூட்டிங்...

அடுத்த மாதம் ஷூட்டிங்...

சென்னை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

English summary
We all know Goundamani is doing a full-fledged comedy film as hero in 49-O; the shoot is over and post-production is almost complete as well. The comic actor has now signed another film as hero. The project, Enakku Veru Yengum Kilaigal Kidaiyathu, will be directed by Ganapathy Balamurugan.
Please Wait while comments are loading...