»   »  கவுண்டரை வைத்து சிவகார்த்திகேயனுக்கு பப்ளிசிட்டி தேடும் ரசிகர்கள்!

கவுண்டரை வைத்து சிவகார்த்திகேயனுக்கு பப்ளிசிட்டி தேடும் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவுண்டமணியின் பெயரை வைத்து சிவகார்த்திகேயனுக்கு அவரது ரசிகர்கள் ட்விட்டரில் பப்ளிசிட்டி தேடியுள்ளனர்.

பல ஆண்டுகள் கழித்து கவுண்டமணி நடிப்பில் வெளியாகும் படம் 49 ஓ. படத்தின் டிரெய்லரில் கவுண்டர் பேசும் வசனங்களை பார்க்கையில் அவர் வெள்ளித்திரையைவிட்டு ஒதுங்கியிருந்தபோதிலும் ஃபார்ம் மட்டும் குறையவே இல்லை என்பது தெரிகிறது.

இந்நிலையில் கவுண்டமணியின் பெயர் ட்விட்டரில் டிரெண்டானது. என்னடா என்று பார்த்தால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கவுண்டமணியை வைத்து அவருக்கு பப்ளிசிட்டி தேடுகின்றனர். சிவாவுக்கு விளம்பரம் தேட அவர்கள் கவுண்டமணியின் பெயரை பயன்படுத்தியதால் அது டிரெண்டாகியிருக்கிறது.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

கவுண்டமணியின் 49 ஓ படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்த விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டதை வைத்து கவுண்டமணியின் பெயரை ஷேஷ்டேக்காக போட்டு ட்வீட் செய்கிறார்கள் சிவாவின் ரசிகர்கள்.

ரசிகர்கள்

சிவகார்த்திகேயன் ப்ரோ கவுண்டமனி சாரை பற்றி அருமையாக பேசியதை பாருங்கள் என்று எஸ்.கே. பிளட்ஸ் ட்வீட் செய்து அதற்குரிய யூடியூப் இணைப்பையும் வெளியிட்டுள்ளது.

சிவா

49 ஓ இசை வெளியீட்டு விழாவில் காமெடி மன்னர் கவுண்டமணி சாருடன் சிவகார்த்திகேயன் அண்ணா என டீம் சிவகார்த்திகேயன் ட்வீட் செய்துள்ளது.

கவுண்டமணி

சிவகார்த்திகேயன் அண்ணா ஜாம்பவான் கவுண்டமணி சார் பற்றி பெருமைாக பேசினார் என்று சிவகார்த்திகேயன் ஏஎப்சி ட்வீட் செய்துள்ளது.

நல்லா வருவீங்க

நல்லா வருவீங்க

கவுண்டர் பல காலம் கழித்து ஃபுல்பார்மில் வந்தால் இந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சந்து கேப்பில் சிவாவுக்கு விளம்பரம் தேடிவிட்டார்களே. வருத்தப்படாத வாலிபர் சங்க மக்களே நீங்கள் எல்லாம் நல்லா வருவீங்க.

English summary
#Goundamani is trending on twitter as Sivakarthikeyan fans got excited and tweeted about their favourite actor Siva using the former's name.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil