»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

பத்ரி சரியாக ஓடாததையடுத்து நடிகர் விஜய் நடிக்கும் படங்களின் கதை விவாதத்தில் பங்கு கொள்ள தனியாக குழு அமைத்துள்ளாராம் அவரது தந்தைஎஸ்.ஏ.சந்திரசேகரன். பத்ரி ஓடாததான் காரணத்தையும் இவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

நந்தாவுக்குப் பிறகு பாப்போம்!

நந்தா படத்தின் வெற்றி, தோல்வியைப் பொறுத்து, புதிய இயக்குநர்களின் படத்தில் தொடர்ந்து நடிப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய இருக்கிறார் நடிகர்சூர்யா.

சிரிக்க வச்சா போதும்!

இடையில் காணாமல் போன கவுண்டமணி, செந்தில் ஜோடி மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார்கள். அதாவது, கவுண்டமணிக்கு சான்ஸ் வந்தால் செந்திலையும்,செந்திலுக்கு சான்ஸ் வந்தால் கவுண்டமணியையும் ஜோடியாக இடம் பெறச் செய்வது என பல முக்கிய அம்சங்கள் இந்த திடீர் கூட்டணியின் பின்னணியில்இருக்கிறதாம்.

கலக்கல் இரட்டையர்களின் திடீர் கூட்டணிக்குக் காரணம் எப்படியாவது, விவேக்கையும், வடிவேலுவையும் பீல்டை விட்டு தலை தெறிக்க ஓடச்செய்வதுதானாம்.

யார் ஓடுகிறார்களோ, இல்லையோ, நம்மைச் சிரிக்க வைத்தால் போதும்!

Please Wait while comments are loading...