கவுண்டமணியின் ரியல் லைஃப் கவுண்ட்டர் மொழிகள்.. அவரிடம் நடிகரோட தலை சிக்கி பட்ட பாடு இருக்கே!
சென்னை: தமிழ் சினிமாவில் கவுண்டமணியை யாராலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது. அவர் பிடித்து வைத்திருக்கும் இடம் என்பதையும் யாராலும் அவ்வளவு எளிதில் நிரப்பிவிட முடியாது. பேசும் ஒவ்வொரு வார்த்தையிலுமே அவர் கவுண்ட்டர்களை அள்ளி வீசுபவர். இன்றுவரை அவர் காமெடியன்களில் சூப்பர் ஸ்டாராகவே திகழ்ந்துகொண்டிருக்கிறார்.
பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படத்தில் நடித்து அடையாளப்பட்டவர் கவுண்டமணி. அதற்கு முன்னதாகவே அவர் சில படங்களிலும், நாடகங்களிலும் நடித்திருக்கிறார். நாடகத்தில் நடிக்கும்போதே தனது அசாத்திய திறமையால் அனைவரையும் கட்டிப்போட்ட திறமையை கொண்டிருந்தார். அவர் அடிக்கும் ஒவ்வொரு கவுண்ட்டரிலிருந்தும் ஒருவர்கூட தப்பிக்கவில்லை. அதனை பாக்கியராஜ் கவனித்துக்கொண்டே இருந்திருக்கிறார்
பிஸியான கவுண்டமணி: சரியான நேரத்தில் பாரதிராஜாவிடம் கவுண்டமணியை பற்றி சொல்ல திரைத்துறை கதவு திறந்தது. 16 வயதினிலே படத்துக்கு பிறகு கிழக்கே போகும் ரயில் உள்ளிட்ட படங்களில் நடித்து தனது தனித்துவமான முத்திரையை பதிக்க ஆரம்பித்தார். இதன் காரணமாக தமிழ் சினிமாவில் பிஸியான காமெடி நடிகராக வலம் வர ஆரம்பித்த சூழ்நிலையில்தான் இவருக்கு இன்னொரு பலமாக வந்து சேர்ந்தார் செந்தில். இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து திரையில் அடித்த லூட்டிகள் தமிழ் சினிமாவில் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் அனைவரையும் சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும்.
அந்த கால அஜித்: கவுண்டமணியின் காமெடிகள் உருவ கேலி செய்பவை, அடுத்தவரை ரொம்பவே அட்டாக் செய்யும் என்று பல விமர்சனங்கள் இருந்தாலும் அவர் தனது காலகட்டத்தில் தன்னை சுற்றி என்ன நடந்ததோ அதனை கவனித்து தனது கலையில் பிரதிபலித்தவர். அதேபோல் பொது அறிவும், உலக தேடலும் அதிகம் கொண்டவர் கவுண்டமணி. அதனையும் அவர் தனது காமெடியில் அதிகம் பேசியிருக்கிறார். இன்றுவரை அவர் பார்த்திருக்கும் தமிழ் படங்கள் வெகு சொர்ப்பமே என்பது அவருக்கு நெருங்கியவர்கள் கூறும் கருத்து அதேபோல் பத்திரிகையாளர்களையும் அவ்வளவு எளிதாக சந்தித்துவிட மாட்டார் அவர்.

கவுண்டமணிதான் கச்சா பொருள்: சந்தானம் மிகப்பெரிய காமெடியனாக இருந்தாலும் அவரது காமெடிகளில் கவுண்டமணி ஸ்டைல்தான் அதிகம் இருந்தன. அதனை அவரும் பல மேடைகளில் ஒத்துக்கொண்டிருக்கிறார். அதேபோல் பலருக்கும் கவுண்டமணியின் காமெடிகள்தான் கச்சா பொருளாக இன்றுவரை இருந்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பக்கம் இருக்க திரையில் எப்படி கவுண்டமணி கவுண்ட்டர் அடித்து அனைவரையும் காலி செய்வாரோ அதேபோல் ரியல் லைஃபிலும் அவரது கவுண்ட்டர்களுக்கு பஞ்சமில்லை.
தலை பட்ட பாடு: ஒரு படத்தில் கவுண்டமணியுடன் மறைந்த நடிகர் போண்டாமணி நடித்தாராம். அதற்காக தனது முடியை வித்தியாசமான முறையில் வெட்டி இருந்திருக்கிறார். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றதும் அவரது தலையை பார்த்த கவுண்டமணி அவரை அருகே அழைத்து, 'இது என்ன முடிவெட்டு' என்று கேட்டாராம். அதற்கு போண்டாமணியோ, "இல்ல அண்ணே உங்களோட நடிக்கப்போறேன் அதற்கான கெட்டப்புதானே இது. வித்தியாசமாக இருக்கட்டும்னு இப்படி வெட்டினேன்" என என்று கூறினாராம்.
உடனடியாக செந்திலை அழைத்த கவுண்டமணியோ, 'இங்க பாரு செந்தில் இத ஒரு முடி வெட்டுனு சொல்றான். நாய் வந்து தலையை கடிச்சுப்போட்ட மாதிரி இருக்கு' என்று கூறிவிட்டு, 'சாப்பிட்டியா பாக்கெட்டில் என்ன வைத்திருக்கிறாய்' என கேட்க போண்டாமணியோ தன்னிடம் இருந்து 5 போண்டாக்களை எடுத்து நீட்டியிருக்கிறார். அதற்கும் விட்டு வைக்காத கவுண்டமணி, "இங்க பாரு நாய் போண்டா வியாபாரம் செய்து" என்று கூறினாராம். உடனே அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட்டார்களாம்.
அது மட்டுமின்றி இந்த சம்பவம் குறித்து பின் நாட்களில், 'கவுண்டமணியை சிரிக்க வைத்த போண்டாமணி' என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்தனவாம். இதில் கவுண்டமணி போண்டா மணியை நாயுடன் ஒப்பிட்டு பேசியது ஒரு பக்கம் பலருக்கு விருப்பமில்லாமல் இருந்தாலும கவுண்டமணி இந்த மாதிரி பேசும்போது மட்டும்தான் அருகில் இருப்பவர்கள் ரசித்து சிரிப்பார்கள் என்பது உண்மை.


Click it and Unblock the Notifications











