»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி வீடு மீது தயாரிப்பாளர் ஒருவர், கோஷ்டியுடன் சென்று தாக்குதல் நடத்தினார். இதில் கவுண்டமணி வீட்டின் ஜன்னல், கண்ணாடிகள்அடித்து நொறுக்கப்பட்டன.

வீரநடை என்ற படத்தின் தயாரிப்பாளர் அதியமான். இப்படத்தில் கவுண்டமணி நடித்துள்ளார். அதற்கான சம்பளத் தொகையில் இரண்டரை லட்சம் ரூபாய் பாக்கிஉள்ளதாம். அத்தொகையை கவுண்டமணி கேட்டு வந்துள்ளார். பாக்கித் தொகை தரப்படாததால், படத்தின் பிலிம்களை, தயாரிப்பாளரிடம் அளிக்ககக்கூடாது என்று சினிமா லேட் நிர்வாகியிடம் கவுண்டமணி கடிதம் கொடுத்தார்.

அதன்படி படச் சுருளை, தயாரிப்பாளரிடம் தர அவர்கள் மறுத்து விட்டனர். அதனால் இன்று ரிலீஸாக வேண்டிய படம் தடைபட்டது. ஆத்திரமடைந்ததயாரிப்பாளர், 10பேருடன் தேனாம்பேட்டை செனடாப் ரோட்டில் உள்ள கவுண்டமணி வீட்டிற்குச் சென்றார். வீட்டில் இருந்தவர்கள் கவுண்டமணி இல்லைஎன்று பதில் சொல்லியுள்ளனர்.

வீட்டில் இருந்து கொண்டே சந்திக்க மறுக்கிறார் என்று எண்ணிய தயாரிப்பாளர், ஆத்திரம் அடைந்தார். கவுண்டமணி வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குதல்நடத்தினர். இதில் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. பின்னர் தகவல் கிடைத்து வந்த கவுண்டமணி, தேனாம்பேட்டை போலீஸில் புகார் கொடுத்தார்.

இதற்கிடையில், சினிமாப் பிரமுகர்கள் சிலர், கவுண்டமணியையும், தயாரிப்பாளர் அதியமானையும் அழைத்து சமரசம் பேசினர். இதில் ஏற்பட்டஉடன்பாட்டின்படி, போலீஸில் கொடுத்த புகாரை கவுண்டமணி திரும்பப் பெற்றார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil