»   »  சிம்புவும் வேண்டாம்… தனுஷும் வேண்டாம்... அடுத்த படத்துக்கு தாவிய கவுதம்மேனன்!

சிம்புவும் வேண்டாம்… தனுஷும் வேண்டாம்... அடுத்த படத்துக்கு தாவிய கவுதம்மேனன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கவுதம்மேனன் போன்ற இயக்குனர்கள் இதுபோன்ற துணிச்சலான முடிவுகளை எடுத்தால்தான் ஹீரோக்களின் அட்டகாசம் அடங்கும். வேறெந்த சினிமாவிலும் இல்லாத அளவுக்கு தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் ராஜ்ஜியம் கொடிகட்டி பறக்கிறது. அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்று ஆகிவிட்டது.

சிம்புவை வைத்து சுமார் மூன்று ஆண்டுகளாக அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கி வருகிறார். இதுநாள் வரை சிம்புவை விட்டுக்கொடுக்காமல் பேசிவந்த கவுதம்மேனன் பொறுத்தது போதும் என பொங்கி விட்டார். அந்த அளவுக்கு ஷூட்டிங்குக்கு வராமல் சொதப்பி கவுதம்மேனனை கடுப்புமேனன் ஆக்கிவிட்டார் சிம்பு.

Gountham Menon pulled out from Dhanush & Simbu projects

சிம்பு தான் இப்படி இருக்கிறாரே என்று தனுஷை கமிட் செய்து என்னை நோக்கி பாயும் தோட்டா தொடங்கினார் கவுதம். அந்த தோட்டாவும் பாயாமல் பாதியிலேயே நிற்கிறது. என் கால்ஷீட் வேணும்னா எங்க அண்ணன் இயக்கத்துல நீங்க படம் தயாரிக்கணும் என்று கொரில்லா செல்லுக்கு அழைத்தார் தனுஷ். கவுதமும் நம்பித்தான் போனார். இப்போது கவுதம் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை முடிந்துவிட்டது.

ஆனால் தோட்டாவுக்கு கால்ஷீட் தந்த தேதிகளை மாற்றி வடசென்னைக்கு கொடுத்துவிட்டார் தனுஷ். கெட்டப்பையும் மாற்றிவிட்டார்.

இரண்டு ஹீரோக்களின் ஆட்டத்தால் கடுப்பான கவுதம்மேனன் இரண்டு படங்களையும் அப்படியே போட்டுவிட்டு மூன்றாவது ஒரு படத்தை தொடங்கியிருக்கிறார். ஜெயம்ரவி, பிருத்விராஜ், புனித் ராஜ்குமார், சாய் தரம் தேஜ் என தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் நான்கு மொழிகளுக்கான ஒரு படத்தை எடுக்கவிருக்கிறார்.

ஹீரோயின்களாக அனுஷ்கா, தமன்னா ஆகிய இருவரையும் ஒப்பந்தம் செய்து அட்வான்ஸும் தந்துவிட்டாராம்.

ஆக, இந்த படம் ஹிட் ஆனால் தமிழுக்கு இரண்டு எக்ஸ்ட்ரா ஹீரோக்கள் சேர்வார்கள். ஸூப்பரு!

English summary
After his bitter experience with Dhanush and Simbu, Goutham Menon is now joining with Jayam Ravi, Prithviraj and Sai Tharam Tej.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil