twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓரினச் சேர்க்கையாளர்களாக நடித்துள்ள அனகா, கெளரி கிஷன்.. பாராட்டுக்களை அள்ளும் மகிழினி ஆல்பம்!

    |

    சென்னை: 96 படத்தில் ஜானுவாக நடித்த கெளரி கிஷன் மற்றும் நட்பே துணை படத்தின் நாயகி அனகா இருவரும் இணைந்து ஓரின சேர்க்கையாளர்களாக நடித்துள்ள மகிழினி ஆல்பம் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

    தமிழ் சினிமாவில் இதுபோன்ற LGBT சமூகத்தினருக்கான படங்கள் மற்றும் பாடல்கள் வருவது மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படும் சூழலில் மிகவும் அற்புதமாக இந்த பாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    அனகா மற்றும் கெளரி கிஷன் பரத நாட்டிய கலைஞர்களாகவும் இருவருக்குள்ளும் காதல் மலர அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் கடைசியில் என்ன ஆகிறது என்கிற மொத்த கதையையும் இந்த மகிழினி பாடல் காட்சிப்படுத்தி இருக்கிறது.

     16 வயதினிலே ஸ்ரீதேவி போல சைடு ரோஸ் உடன் போஸ் கொடுக்கும் நடிகை கௌரி கிஷன்! 16 வயதினிலே ஸ்ரீதேவி போல சைடு ரோஸ் உடன் போஸ் கொடுக்கும் நடிகை கௌரி கிஷன்!

    மகிழினி

    மகிழினி

    சரிகமா தமிழ் யூடியூப் சேனலில் மகிழினி ஆல்பம் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குநர் வி.ஜி. பாலசுப்ரமணியன் இந்த பாடலை இயக்கி உள்ளார். ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் அவர்களின் மன நிலையை குடும்பத்தினர் குறிப்பாக பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

    96 ஜானு

    96 ஜானு

    விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் பள்ளிப் பருவ ஜானுவாக நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் கெளரி கிஷன். தளபதி விஜய்யின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கெளரி கிஷன் ஆல்பம் பாடல்கள் பக்கமும் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், இந்த மகிழினி ஆல்பத்தில் சென்னையை சேர்ந்த மலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    டிக்கிலோனா ஹீரோயின்

    டிக்கிலோனா ஹீரோயின்

    ஹிப்ஹாப் தமிழா ஆதியின் நட்பே துணை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனகா. சமீபத்தில் வெளியான சந்தானத்தின் டிக்கிலோனா படத்திலும் ஹீரோயினாக நடித்த அனகா "பேர் வச்சாலும்" பாடலுக்கு நடனமாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்து இருந்தார். இந்நிலையில், இவரும் கெளரி கிஷனும் இணைந்து இந்த ஆல்பத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களாக நடித்துள்ளனர்.

    ஓரினச் சேர்க்கையாளர்கள்

    சென்னையை சேர்ந்த மலர் மற்றும் டில்லியில் இருந்து சென்னைக்கு வரும் இந்துஜா பரதநாட்டிய பள்ளியில் பயிற்சியின் போது ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்குகின்றனர். கெளரி கிஷனின் பெற்றோர் அவரது இந்த விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் அடித்து துன்புறுத்தும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. கடைசியாக இருவரையும் பரத நாட்டியம் எப்படி சேர்க்கிறது என்பதும் இந்த சமூகம் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் இந்த பாடல் உணர்த்துகிறது. மதன் கார்க்கி வரிகளும், கோவிந்த் வசந்தாவின் இசையும் அருமை.

    பெருகும் ஆதரவு

    பெருகும் ஆதரவு

    பாவக் கதைகள் ஆந்தாலஜியில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான லவ் பண்ணா உட்றணும் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான திட்டம் இரண்டு உள்ளிட்ட படங்கள் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் கதைகளாக உருவாகின. இந்நிலையில், மகிழினி ஆல்பம் அந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது.

    English summary
    96 fame Gouri Kishan and Dikkiloona fame Anagha turns lesbian for an album song titled Magizhini out now. Madhan Karky penned the lyrics and Govind Vasantha musical makes the album a wonder one.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X