»   »  கௌதம் மேனன் உயிரைக் காப்பாற்றியவர் இவர்தான்... உருக்கமாக நன்றி சொன்ன கௌதம்!

கௌதம் மேனன் உயிரைக் காப்பாற்றியவர் இவர்தான்... உருக்கமாக நன்றி சொன்ன கௌதம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
கௌதம் மேனன் உயிரைக் காப்பாற்றியவர் இவர்தான்... உருக்கமாக நன்றி சொன்ன கௌதம்!- வீடியோ

சென்னை : தமிழ் சினிமாவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெறும் படங்களை எடுத்து வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் தற்போது விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்தை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் கௌதம் மேனன் நேற்று சென்னை செம்மஞ்சேரி வழியாகச் சென்னை வரும்போது ஒரு டிப்பர் லாரியில் மோதியுள்ளார். இந்த விபத்தில், இவருடைய கார் பெரும் சேதம் அடைந்தது.

கௌதம் மேனன் காயங்களுடன் நூலிழையில் உயிர் தப்பினார். உடனே அவரை தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

கௌதம் மேனன்

கௌதம் மேனன்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் கௌதம் மேனன். 'மின்னலே', 'வாரணம் ஆயிரம்', 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்தை இயக்கி வருகிறார்.

கார் விபத்து

கார் விபத்து

கௌதம் மேனன் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு மாமல்லபுரத்தில் இருந்து செம்மஞ்சேரி வழியாக சென்னை வந்துகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே அவரது கார், டிப்பர் லாரியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், அவரது கார் பெரும் சேதம் அடைந்துள்ளது.

உயிர் தப்பினார்

உயிர் தப்பினார்

அதிர்ஷ்டவசமாக கௌதம் மேனன் சிறு காயங்களுடன் தப்பினார். அந்த சமயத்தில் தனக்கு உதவிய HCL நிறுவனத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் பற்றி கௌதம் மேனன் ட்விட்டரில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அவரை பார்த்த பிறகு மனிதாபிமானத்தின் மீது பெரும் நம்பிக்கை வந்தது என குறிப்பிட்டுள்ளார்.

உதவியவருக்கு நன்றி

"என் நலன் விரும்பிய , நலம்பெற வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி. வாழ்வைத் திருப்பிய நொடிகள் அவை. இப்போது நலமாக இருக்கிறேன். எச்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரியும் கோபாலகிருஷ்ணன் செய்த உதவியால் மனிதாபிமானத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டேன். மீண்டும் படப்பிடிப்பு தொடங்க காத்திருக்கிறேன்." என ட்வீட் செய்திருக்கிறார் கௌதம் மேனன்.

English summary
Gautham Menon had collapsed in a tipper lorry when he came to Chennai via Semmencheri. In this accident, his car suffered great damage. Gautham Menon survived in the yarn with injuries. Some people immediately took him to a private hospital. Gautham Menon thanked the person who saved his life on this incident.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil