»   »  கமல் அடிபட்டு படுத்திருக்கார்... எப்படி கபாலியைப் பார்த்திருக்க முடியும்? - கவுதமி

கமல் அடிபட்டு படுத்திருக்கார்... எப்படி கபாலியைப் பார்த்திருக்க முடியும்? - கவுதமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாளத்தில் வெளியான ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, தமிழில் வெளியான இருவர், போன்ற படங்களுக்குப் பிறகு.. மோகன்லாலுடன் கவுதமி இணைந்து நடித்திருக்கும் படம் 'நமது'.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மூன்று மொழிகளில் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகும் படம் இது.

இந்தப் படம் தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் கவுதமி.

நல்ல கதை

நல்ல கதை

அவர் கூறியதாவது...

"இயக்குநர் சந்திரசேகர் ஏலட்டி என்னை தொடர்பு கொண்டு கதை சொல்ல வேண்டும் என்று கேட்டார். அந்த இயக்குநரைப் பற்றி ஆந்திரா முழுவதும் அவர் இயக்கிய 'அய்த்தே' என்ற படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் தேசிய விருதையும் வாங்கி கொடுத்தது. அவர் மீது எல்லோருக்கும் ஒரு மதிப்பு இருப்பதால் நானும் கதை கேட்க சம்மதித்தேன். அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்தது. நான் எது மாதிரியான கதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேனோ.. அது மாதிரியான கதாப்பாத்திரத்தை இயக்குநர் சொன்னதால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

மோகன்லால்

மோகன்லால்

படப்பிடிப்பு நடைபெற்ற போது யாருக்கும் சலிப்பு வராத மாதிரி இயக்குநர் பார்த்துக் கொண்டார். அதிலேயே படம் நல்ல படமாக வரும் என்ற நபிக்கை எனக்கு இருந்தது. எனக்கு கதை சொன்ன உடனே ஒப்புக்கொண்டேன். நடிகர் மோகன்லாலிடம் கதை சொல்லக் கேட்ட போது, ஒரு வருடம் ஆகும் என்று கூறிய அவரே..முழு கதையையும் கேட்ட உடனே.. நடித்து முடித்து இப்போது படம் வெளியாகப் போகிறது.

நான்கு தலைமுறை கதை

நான்கு தலைமுறை கதை

நான்கு தலை முறைகளைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக அமர்ந்து பார்க்க கூடய வன்முறை இல்லாத படம். இன்றைய 'நமது' தலைமுறையினர் பார்க்கவேண்டிய படமாகவும் இது இருக்கும்.

நன்கு கதாபாத்திரங்களைச் சுற்றி ஒரு கதை. நால்வரும் சந்திக்கும் போது படத்தின் கிளைமாக்ஸ் புது மாதிரியாக இருக்கும். ஊர்வசி காமெடியில் கலக்கி இருக்கிறார்.

பாபநாசம் பார்த்துதான் கூப்பிடறீங்களா?

பாபநாசம் பார்த்துதான் கூப்பிடறீங்களா?

பாபநாசம் படத்தை பார்த்துதான் என்னை நடிக்க கேட்கிறீர்களா? என்று நான் கேட்டேன்.. ஆனால் நான் பாபநாசம் படம் பார்க்கவில்லை. இந்தக் கதையை நான் இரண்டு வருடங்களாக எழுதுகிறேன். இந்த கதாப்பாத்திரத்தில் நீங்கள் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று சொன்னது எனக்கு பெருமையாக இருந்தது.

சொந்தக் குரலில்

சொந்தக் குரலில்

இந்த படத்தின் தயாரிப்பாளர் ரஜினி கோரப்பட்டி, இயக்குனர் சந்திரசேகர் ஏலட்டி இருவரும் இந்த படத்தை ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வெளியிடுவது பெரிய விஷயம். நான் தமிழ், தெலுங்கு இரண்டிலும் எனது சொந்த குரலில் பேசியிருக்கிறேன். விரைவில் மலையாளத்தில் பேச முயற்சி செய்வேன்," என்றார்.

தொடர்ந்து

தொடர்ந்து

தொடர்ந்து நடிப்பீர்களா? என்ற கேள்வி எழுந்த போது... "கண்டிப்பாக.. எனக்கு ஏத்த கதாப்பாத்திரங்கள், நல்ல டீம் வந்தால் நடிப்பேன். நான் பதினாறு, பதினேழு வயதில் நடிக்க வந்து இதுவரை 120 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். இப்பொழுது மேக்கப் போட்டு நடிக்கவில்லை என்றாலும் சினிமாவை விட்டு எங்கும் போகல..அது என் ரத்ததிலேயே ஊறியது," என்றார் கவுதமி.

கமல் ஹாஸன்

கமல் ஹாஸன்

கமல்ஹாசன் எப்படி இருக்கிறார் என்று ஒரு நிருபர் கேட்ட போது...

"குணமாகிக்கொண்டு வருகிறார். ஓடியாடி வேலை செய்தவர் இப்போது ஒரே இடத்தில் இருப்பது அவருக்கு வேதனையாக இருக்கிறது," என்றார்.

கமலின் கபாலி விமர்சனம்

கமலின் கபாலி விமர்சனம்

கபாலி படத்தை பார்த்து கமல் விமர்சனம் எழுதியதாக சமூக வலை தளங்களில் செய்தி பரவி வருகிறது என்று கேட்ட போது...

"காலில் அடிபட்டு படுத்திருக்கிற அவரால் எப்படி படம் பார்க்க முடியும்? அது தவறான செய்தி," என்று கூறினார்..

மகள்

மகள்

உங்கள் மகளை எந்த துறையில் ஈடுபடுத்த எண்ணம்?

"கலைத் துறைதான் அவுங்களுக்கும் விருப்பம். இதில் எந்த துறை அவுங்களுக்கு பிடிக்கிறதோ அதில் ஈடுபடுவார்," என்றார்.

English summary
Actress Gouthami denied reports about Kamal Hassan's review for Rajini's Kabali movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil