»   »  விக்ரம் மகனுக்கு ஜோடியாகிறார் கவுதமி மகள்?

விக்ரம் மகனுக்கு ஜோடியாகிறார் கவுதமி மகள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
விக்ரம் மகனுக்கு ஜோடியாகிறார் கவுதமி மகள்?- வீடியோ

பாலா இயக்கும் வர்மா படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக கௌதமியின் மகள் சுப்புலட்சுமி நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விக்ரம் இன்னமும் தமன்னா போன்ற நாயகிகளுடன் டூயட் பாடிக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் அவருக்கே டூயட் பாடும் வயதில் ஒரு மகன் இருப்பது சமீபத்தில்தான் தெரியவந்தது. அவர்தான் துருவ் விக்ரம்.

Gouthami's daughter to be paired to Dhuruv Vikram

இவரை நாயகனாக வைத்து இயக்குநர் பாலா ஒரு படத்தை இயக்குகிறார். தெலுங்கில் வெளியாகி வெற்றிப் பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்தான் இந்தப் படம்.

இந்தப் படத்தின் நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், குறிப்பாக இசையமைப்பாளர் போன்ற விவரங்கள் வெளியாகாத நிலையில், படத்தின் நாயகியாக நடிகை கவுதமியின் மகள் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

கவுதமியின் மகள் சுப்புலட்சுமி, சினிமாவில் நாயகியாக நடிக்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறார். அவரை ஒரு பெரிய இயக்குநர் மூலம் அறிமுகம் செய்ய வேண்டும் என தீவிரமாக இருந்தார் கவுதமி. இப்போது பாலாவிடம் தன் மகளை ஒப்படைத்துள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகலாம்.

English summary
Gouthami's Daughter Subbulakshmi is playing female lead role in Bala's Varma

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil