»   »  எங்கள் பிரிவுக்கு ஸ்ருதி- அக்ஷரா காரணமல்ல!- கௌதமி

எங்கள் பிரிவுக்கு ஸ்ருதி- அக்ஷரா காரணமல்ல!- கௌதமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் ஹாஸனை விட்டு நான் பிரிந்ததற்கு ஸ்ருதியோ, அக்ஷராவோ காரணமல்ல என்று கூறியுள்ளார் நடிகை கௌதமி.

இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், "எ‌ங்களி‌டை‌யே நிக‌ழ்‌ந்‌து இரு‌க்கு‌ம் இ‌ந்த பிரிவு குறி‌த்‌து நா‌ங்க‌ள் ‌வெளி‌க்கா‌ட்டி‌க் ‌கொ‌ள்ளாம‌லே‌யே இரு‌ந்திரு‌க்கலா‌ம். ஆனா‌ல் நா‌ன் ‌பொ‌து வா‌ழ்‌க்‌கையி‌ல் இரு‌க்கு‌ம் ‌பெ‌ண். ‌பொ‌து வா‌ழ்‌க்‌கை எ‌ன்றால் எ‌ல்லா‌ம் ‌பொ‌துவான‌துதா‌ன். எ‌தையு‌ம் ம‌றை‌த்‌து எ‌த்த‌னை நாளு‌க்கு வாழ முடியு‌ம். எ‌ன் வா‌ழ்‌க்‌கை மா‌ற்ற‌ங்க‌ள் குறித்துச் சொ‌ல்ல வே‌ண்டிய பொறு‌ப்பு என‌க்கு உ‌ள்ள‌து. 16 வயதி‌ல் சினிமாவு‌க்கு வ‌ந்‌தே‌ன். சுய சி‌ந்த‌னையி‌ல் இ‌வ்வளவு உயர‌ம் ‌தொ‌ட்‌டே‌ன். இ‌ப்‌போ‌து எ‌ன் மகளு‌க்காக நி‌றைய யோசி‌க்க வே‌ண்டியு‌ள்ள‌து. அதனா‌ல் பிரிகி‌றே‌ன். மா‌ற்ற‌த்‌து‌க்காக எ‌ல்‌லோரு‌ம் மன உ‌ளை‌ச்ச‌லை ச‌ந்தி‌‌த்‌துதா‌ன் ஆக ‌வே‌ண்டு‌ம்.

Gouthami's open talk about her separation with Kamal

இனி மகளி‌ன் எதி‌ர்கால‌ம் ப‌ற்றி‌த்தா‌ன் ‌யோசி‌ப்‌பே‌ன். இ‌து ப‌ற்றி விரிவாக ‌பேச முடியா‌து.

ஷ்ருதி ஹாச‌ன், அ‌க்ஷரா இட‌ம் ‌வேறு. எ‌ன் இட‌ம் ‌வேறு. அவ‌ர்க‌ளை எதி‌ர்‌க்க நா‌ன் யா‌ர்? எ‌ப்‌போ‌து‌ம் அவ‌ர்களு‌க்கு ஆதரவாக இரு‌ந்‌து இரு‌க்கி‌றே‌ன். ப‌க்க பலமாகவு‌ம் இரு‌ந்‌து வ‌ந்திரு‌க்கி‌றே‌ன். காரண‌ம் அ‌துவ‌ல்ல," என்று கூறியுள்ளார்.

பிரதம‌ர் ‌மோடி‌யைச் சந்தித்த பிறகு இந்த முடிவை எடுத்தீர்களா? என்ற கேள்விக்கு, "இ‌து ஏ‌ற்‌கென‌வே எடு‌த்த முடிவு. பிரதம‌ர் ‌மோடி‌யை மரியா‌தை நிமி‌த்தமாகவே ச‌ந்தி‌த்‌தே‌ன். இர‌ண்‌டையு‌ம் ‌தொட‌ர்புப் படு‌த்த ‌வே‌ண்டா‌ம்," என்றார்.

English summary
Gouthami says that either Shruthi Hassan nor Akshara have are not behind her separation with Kamal Hassan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil