twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமா திருட்டு இணையதளங்களுக்கு டெல்லி ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி - தமிழ் ராக்கர்ஸ்க்கு சிக்கல்

    |

    சென்னை: சட்டவிரோதமாக புதிய படங்களை பதிவேற்றம் செய்வதை உடனடியாக முடக்கும் வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தகவல் தொழில்நுட்பம் வளர வளர அது நம்முடைய வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு உதவிகரமாக உள்ளதோ அதே அளவுக்கு உபத்திரமாகவும் தொந்தரவாகவும் மாறிவருகிறது. தொழில்நுட்பம் எட்டிப்பார்க்காத அந்தக் காலத்தில் ஃபிலிம் ரோல் கொண்டு படம் எடுக்கும்போது கூட இந்த அளவுக்கு திருட்டுத்தனமாக படங்கள் வெளிவரவில்லை.

    Government must take action against Illegal internet connection

    ஆனால், இன்றைய வளர்ந்துவிட்ட நவீன தொழில்நுட்ப உலகில், ஒரு படத்தை எடுத்து முடித்து வெளியிடும் அன்றைக்கே திருட்டுக் கும்பல்கள் முறைகேடாக இணையதளத்திலும் வெளியிட்டு லாபம் பார்த்துவிடுகின்றனர். இதே நிலைமை நீடிக்குமானால், வருங்காலத்தில் படத்தை எடுத்து ரிலீஸ் செய்யும் முன்பே திருட்டுக் கும்பல் அந்தப் படத்தை இணையதளத்தில் வெளியிட்டுவிடும் மோசமான நிலை நிச்சயம் ஏற்படும்.

    ஒருவர் வியர்வையும் ரத்தத்தையும் சிந்தி உழைக்கும்போது, அந்த பலனை உழைப்பவர் மட்டுமே அனுபவிக்கவேண்டும். அதுதான் தர்மமும் கூட. அதற்கு மாறாக அந்தப் பலனை உழைப்பருக்கே தெரியாமல் திருடி வேறொருவர் அனுபவிப்பது என்பது மன்னிக்க முடியாத செயலாகும். இதற்கு இந்த சமூகமும் உடந்தையாக இருப்பதும் கை கட்டி வேடிக்கை பார்ப்பதும் பொறுத்துக்கொள்ள முடியாத வேதனை தான்.

    ஒரு திரைப்படம் உருவாவதில் பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் நடிகைகள், தொழில் நுட்ப வல்லுநர்கள், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், நடன கலைஞர்கள் என நேரடியாகவும் மறைமுகமாகவும் பலர் தங்களது கடின உழைப்பால் வெயில் மழை பாராமல் உழைத்து உருவாக்குகின்றனர்.

    பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்படும் அப்படம் நிச்சயம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையில் தான் எடுக்கப்படுகின்றன. ஆனால் அந்த புதிய படங்களை தியேட்டரில் வெளியான உடனேயே இணையத்தளத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்கின்றன தமிழ் ராக்கர்ஸ் போன்ற பல வளைத்தளங்கள்.

    தயாரிப்பு நிறுவனம் ஒன்று இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. அதை தொடர்ந்து இது போன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் இணையதள முகவரிகளை உடனே முடக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

    இதனால் தயாரிப்பாளர்கள் பெரும் இழப்பை சந்திக்கின்றனர். அனுமதியின்றி பதிவேற்றம் செய்யும் இணையதளங்களை உடனடியாக முடக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய தொலைத் தொடர்பு துறை மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இது போன்ற சட்ட விரோதமான செயல்களுக்கு நிச்சயம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் அதும் அதிரடியாக செயல்பாட்டிற்கு வர வேண்டும் என்பதே திரையுலகத்தினரின் வேண்டுகோள்.

    English summary
    The Delhi High Court has ordered the Center to take appropriate action to immediately halt the illegal upload of new movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X