»   »  ரஜினி, கமலுக்கு முன் நாம முந்திக்கிட்டா என்ன? - தமிழக அரசு யோசனை

ரஜினி, கமலுக்கு முன் நாம முந்திக்கிட்டா என்ன? - தமிழக அரசு யோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

தற்போது சினிமா உலகில் நடந்து வரும் வேலை நிறுத்தத்தை தமிழக அரசின் கவனத்திற்கு உளவுத் துறை கொண்டு சென்றுள்ளது.

தயாரிப்பாளர்கள் ஒருபக்கம், திரையரங்க உரிமையாளர்கள் இன்னொரு பக்கம் என அரசுத் தரப்பை அணுகி வருகின்றனர். இதற்கிடையில் இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண திரைப்பட துறையினர் ரஜினி, கமல் இருவருக்கும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர், திரையுலகினர்.

Govt of TN to set up a committee to settle down Cinema Strike

ரஜினியும் கமலும் இப்பிரச்சினை சம்பந்தமாக பேசி, திரைத்துறைக்குள் அசைக்க முடியாத சக்திகளாக மாறுவதற்குள் தமிழக அரசு தலையிடுவது ஆளுங்கட்சிக்கு நல்லது என அதிமுக நலம் விரும்பிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

எனவே தமிழக அரசு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் அங்கம் வகிக்கும் குழு ஒன்றை அமைக்க அறிவிப்பு வெளியிட உள்ளதாக தலைமை செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் இறுதிக்குள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கென தனிக் குழு அமைக்கப்படுவதாக விரைவில் அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.

English summary
Sources say that the Govt of Tamil Nadu may set up a committee to solve the ongoing cinema strike.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X