அடுத்த தரமான சம்பவம் ரெடியாகுது... சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைரக்டர் இவரா?
சென்னை : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் நடிகராக இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். காமெடி, யதார்த்தமான நடிப்பால் அனைவரின் மனதையும் வசீகரித்து வைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
படங்களில் நடிப்பதுடன் பல படங்களை தயாரித்தும் வருகிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் படம் என்றாலே பொழுதுபோக்கு நிறைந்த படமாக என்பது கேரன்ட்டி. அந்த அளவிற்கு நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

காத்திருக்கும் டாக்டர்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. டார்க் காமெடி படமான இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார். மார்ச் மாதமே ரிலீசாகி இருக்க வேண்டிய இந்த படம் தொடர்ந்து பல காரணங்களால் தள்ளி போனது. இதனால் இந்த படம் ஓடிடி.,யில் ரிலீஸ் ஆக உள்ளதாக செய்தி பரவியது. ஆனால் தியேட்டரில் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

வரிசையில் படங்கள்
தொடர்ந்து டைரக்டர் ரவிக்குமார் இயக்கும் அயலான் படம் சையின்ஸ் ஃபிக்சர் படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படமும் காமெடி படமாக தயாராகி வருகிறது. இந்த படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சிங்க பாதை
டான் படத்திற்கு பிறகு அறிமுக இயக்குனர் அசோக் இயக்கும் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்திற்கு சிங்க பாதை என பெயரிடப்பட்டுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இந்த படத்தின் டைரக்டர் அசோக், டைரக்டர் அட்லீயிடம் அசிஸ்டென்டாக பணியாற்றியவர்.

அடுத்த டைரக்டர் இவரா
லேட்டஸ்டாக கோலிவுட் டாக்காக உலா வருவது, சிவகார்த்திகேயனின் அடுத்த படம் பற்றிய தகவல் தான். சிவகார்த்திகேயனின் அடுத்த படம் முழுக்க முழுக்க ரொமான்டிக் படமாக உருவாக உள்ளதாம். இந்த படத்தை இயக்க போவது கவுதம் மேனனாம். கவுதம் மேனன், சிவகார்த்திகேயன் இணையும் படம் பற்றிய ஆரம்ப கட்ட பேச்சவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

2022 ல் இணையும் கூட்டணி
இந்த படத்தையும் ஐசரி கணேசனின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தான் தயாரிக்க போகிறதாம். இந்த படம் 2022 ம் ஆண்டின் மத்தியில் துவங்கப்பட உள்ளதாம். இந்த படத்திற்கான கதையை தயார் செய்யும் வேலைகளை கவுதம் மேனன் ஏற்கனவே துவக்கி விட்டாராம்.

இத்தனை படங்களா
கவுதம் மேனனும் தற்போது பல படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தை தற்போது இயக்கி வருகிறார். அதோடு, ருத்ர தாண்டவம், பத்து தல, விடுதலை, 3.33 உள்ளிட்ட படங்களின் வேலைகளையும் கவனித்து வருகிறார்.

அடுத்த ஆண்டில் அறிவிப்பு
இருவருமே தற்போது கமிட்டாகி உள்ள படங்களை முடித்த பிறகு தாங்கள் இணையும் புது படம் பற்றி முடிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்தே படம் பற்றிய அறிவிப்பும் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











