ஜிபி முத்துவுக்கு 2.. கமலுக்கு 0.. ஆதாம் மேட்டரில் ஆண்டவருக்கே இந்த நிலையா? கலாய்க்கும் ரசிகர்கள்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் சனிக்கிழமை எபிசோடு நல்லாவே களைகட்டும் என்றே தெரிகிறது.

இந்தியன் 2 ஷூட்டிங்கிற்கு விடுமுறை விட்டுவிட்டு அதே லுக்கில் அப்படியே செம ஃபிரெஷ்ஷாக பிக் பாஸ் சீசன் 6ஐ தொகுத்து வழங்க வந்து விட்டார் கமல்.

ஆனால், இந்த சீசனில் ஜிபி முத்து இருக்கும் வரை கமலுக்கு கஷ்ட காலம் தான் என நெட்டிசன்கள் 2வது புரமோவை பார்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.

அப்படியே விட்டு இருக்கலாம்

அப்படியே விட்டு இருக்கலாம்

அறிமுக விழா நிகழ்ச்சியில் ஆரம்பித்த ஆதாம் மேட்டரை கமல் அப்படியே விட்டு இருக்கலாம். அதை சுற்றி சோஷியல் மீடியாவில் வந்த ட்ரோல்களையாவது பிக் பாஸ் டீம் கமலுக்கு போட்டு காட்டிருக்கலாம். ஆனால், அதையெல்லாம் விட்டு விட்டு மீண்டும் அதைப்பற்றியே பேசி பல்பு வாங்கி விட்டாரே கமல் என பிக் பாஸ் ரசிகர்கள் போட்டுள்ள கமெண்ட்டுகளை இங்கே பார்க்கலாம் வாங்க..

கட்சிக்காரர்களை விட

கட்சிக்காரர்களை விட

மக்கள் நீதி மய்யம் கட்சிக்காரர்களை விட ஜிபி முத்து அதிகமாகவே கமல்ஹாசனை கடுப்பேற்றி வருகிறார் என இந்த நெட்டிசன் 2வது புரமோவை பார்த்து பயங்கரமாக சிரித்து விட்டு கமெண்ட் போட்டுள்ளார்.

ஜிபி முத்து ஸ்கோரிங்

ஜிபி முத்து ஸ்கோரிங்

மறுபடியுமா? ஜிபி முத்துவுக்கு 2 மதிப்பெண், கமல் - 0 என ஆதாம் மேட்டரில் ஆண்டவரை பிக் பாஸ் ரசிகர்கள் பங்கமாக வச்சி செய்கின்றனர். இப்படியெல்லாம் கலாய்த்தால் பாதியிலே கிளம்பி விடுவார் பார்த்துக்கோங்க.. அப்புறம் சிம்பு தான் ஹோஸ்ட்டாக வருவார் என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன.

சாந்தி உப்புமா

சாந்தி உப்புமா

மெரினா பீச்சில் சுந்தரி அக்கா கடை போல பிக் பாஸ் வீட்டில் சாந்தியின் உப்புமா ரொம்பவே ஃபேமஸ் ஆகி விட்டது. வெளியே போய் சாந்தி உப்புமா என ஹோட்டல் ஆரம்பித்தே கல்லா கட்டி விடுவார் என ரசிகர்கள் அவரது உப்புமாவிற்கு ரசிகர்களாக மாறி வருகின்றனர்.

இப்பவும் மொக்கை

இப்பவும் மொக்கை

இப்பவும் கமலுக்கு மொக்கை பண்ணா ஜிபி முத்து.. நீ வா தலைவா.. யாருகிட்ட என ஜிபி முத்து ஆர்மியினர் ஆதாம் மேட்டரை வைத்து வேறலெவலில் மீண்டும் ட்ரொல் செய்து கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். இன்றைய நிகழ்ச்சியில் ஜிபி முத்து இன்னும் என்னவெல்லாம் கமலிடம் பேசப் போகிறாரோ என்பதை பார்க்கவும் ரசிகர்கள் வெயிட்டிங்.

நடிக்காத சொறி முத்து

நடிக்காத சொறி முத்து

கமல்ஹாசனை ஜிபி முத்து மொக்கை பண்ணிவிட்டார் என ஜிபி முத்து ஆர்மியினர் ட்ரோல் செய்து வரும் நிலையில், ரொம்பட நடிக்காத சொறி முத்து என ஜிபி முத்துவை கமல் ரசிகர்கள் திட்டி வருகின்றனர். இரண்டு தரப்புக்கும் இடையே சோஷியல் மீடியாவில் சண்டையே ஆரம்பம் ஆகி விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X