நயன்தாரா இல்லைன்னா ரச்சிதா.. பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்து தேர்வு செய்த 2 ஹீரோயின்கள் இவங்கதான்!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்துவுக்கு ரொம்பவே பிடித்தமான போஸ்ட் பாக்ஸை பிக் பாக்ஸ் என்கிற பெயருடன் உள்ளே கொண்டு வந்து ஜிபி முத்துவை ஹேப்பி ஆக்கினார் கமல்.

பின்னர், அதிலிருந்து ரசிகர்கள் அவருக்கு அனுப்பிய முருங்கைக்காய் மற்றும் ஏகப்பட்ட கடிதங்களை அசீம் எடுத்து கொடுத்ததுமே சந்தோஷத்தில் மிதந்தார் ஜிபி முத்து.

ஒரு கடிதத்தை எடுத்து அசீம் படித்த நிலையில், ஜிபி முத்து ஹீரோவாக நடிக்கும் படத்தில் யாரை ஹீரோயினாக போடலாம் என்கிற கேள்வி எழுந்தது.

முருங்கைக்காய் பரிசு

முருங்கைக்காய் பரிசு

சாமான் பத்திரம் என பேசியே ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டில் இன்னும் அந்த வசனத்தை ஆரம்பிக்காத நிலையில், ரசிகர்கள் அவருக்கு முருங்கைக்காயை பரிசாக அளித்து தூண்டி விட்டுள்ளனர். இதன் விளைவு வரும் வாரத்தில் வெளிப்படும் என்றே தெரிகிறது.

ஜிபி முத்துவுக்கு லெட்டர்

ஜிபி முத்துவுக்கு லெட்டர்

போஸ்ட் பாக்ஸையே பிக் பாஸ் வீட்டுக்குள் எடுத்து வந்து ஜிபி முத்துவுக்கு அதிலிருந்து ரசிகர்கள் அனுப்பிய கடிதங்களை எடுக்க முடியாமல் எடுத்து அசீம் படித்தார். ஒட்டுமொத்த லெட்டரையும் படித்தால் சீசனே முடிந்து விடும் என கமெண்ட் அடித்த அசீம் சில கடிதங்களை படித்துக் காட்டினார். வார்த்தைக்கு வார்த்தை தலைவரே என எழுதியிருந்த ஜிபி முத்து ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தினர்.

பிக் பாஸ் ஹீரோ

பிக் பாஸ் ஹீரோ

பிக் பாஸ் சீசன் 6ன் ஹீரோவாகவே முதல் வாரத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் இந்த ஷோவை பார்க்க வைத்து வரும் ஜிபி முத்து, பிக் பாஸ் முடிந்து வெளியே வந்ததும் ஹீரோவாக நடித்தால், உங்களுக்கு ஜோடியாக எந்த இரு நடிகைகளை ஹீரோயின்களாக போடுவீங்க என ரசிகர்கள் கேட்ட கேள்வியை கமல் நினைவூட்ட, உடனடியாக பதில் அளித்தார் ஜிபி முத்து.

நயன்தாரா, சிம்ரன்

நயன்தாரா, சிம்ரன்

ஜிபி முத்து படத்தில் ஹீரோவாக நடித்தால் அந்த படத்தில் ஹீரோயினாக யாரை போடலாம் என்கிற கேள்வியை எழுப்பியதுமே கொஞ்சம் கூட யோசிக்காமல் நயன்தாரா என சொன்னார் ஜிபி முத்து, கமல் அட்ராசக்கை என பாராட்ட, அடுத்த ஜோடி யாரு என்கிற கேள்விக்கு சிம்ரன் என சொன்னதும், வேறலெவல் சாய்ஸ் என கமல் கொடுத்த ரியாக்‌ஷனே ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தியது.

நயந்தாரா இல்லைன்னா ரச்சிதா

நயந்தாரா இல்லைன்னா ரச்சிதா

நடிகைகளை விடுங்க, இந்த வீட்டில் இருப்பவர்களில் யாரை ஹீரோயினாக தேர்ந்தெடுப்பீங்க என்று கேட்டதுமே, அய்யய்ய இந்த வீட்டில் எல்லாம் எனக்கு ஹீரோயினா நினைத்த தலைவர் ஜிபி முத்து, எல்லோரும் என் அக்கா தங்கச்சி என ஒரே போடாக போட்டார். நடிப்புத்தான சும்மா சொல்லுங்க என கமல் மீண்டும் கேட்க ரச்சிதாவின் பெயரை சொன்னார் ஜிபி முத்து.

ஜனனி ஆர்மி காண்டாகிருப்பாங்க

ஜனனி ஆர்மி காண்டாகிருப்பாங்க

அடுத்து யார் என்று கேட்க, உடனடியாக ஜனனி பாப்பாவை ஹீரோயினாக புக் பண்ண தீர்மானித்து விட்டார் ஜிபி முத்து. இந்த சீசனில் பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் யாரை பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனரோ அவரையே ஹீரோயினாக்க வேண்டும் என ஜிபி முத்து ஆசைப்பட்ட நிலையில், ஏகப்பட்ட இளைஞர்கள் கடுப்பாகி திட்டி வருகின்றனர். ஜனனியின் முகமும் ஒரு செகண்ட் சந்திரமுகியாக மாறிவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X