For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஜிபி முத்துவையே அழ வைத்த தனலட்சுமி.. முதல் எவிக்‌ஷனே நீ தான்மா என திட்டித் தீர்க்கும் ஆர்மி!

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது.

  தங்களது குரலை ஸ்ட்ராங்கா சொல்லணும், சைலன்ட்டா இருக்கக் கூடாது என ஒவ்வொரு போட்டியாளர்களும் பக்கா பிளான் உடன் விளையாடி வருகின்றனர்.

  மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஜிபி முத்துவை அமுதவாணன் உள்ளிட்டோர் வேண்டுமென்றே வம்பிழுத்து விளையாடி வரும் நிலையில், மக்கள் போட்டியாளராக கலந்து கொண்ட தனலட்சுமி ஜிபி முத்துவிடம் பிரச்சனை செய்து அவரை கண்கலங்க வைத்து விட்டார்.

  பளிச் பளிச் மீம்ஸ்..ஜிபி முத்துவை பார்த்து வியந்த ரசிகர்கள்..இன்றைய கலாய் மீம்ஸ்!பளிச் பளிச் மீம்ஸ்..ஜிபி முத்துவை பார்த்து வியந்த ரசிகர்கள்..இன்றைய கலாய் மீம்ஸ்!

  ரூல்ஸ் மீறப்படும்

  கமல்ஹாசன் ஜிபி முத்துவை அறிமுகப்படுத்தி உள்ளே அனுப்பும் போதே உங்க இஷ்டத்துக்கு வட்டார வழக்கை எல்லாம் பேசக் கூடாதுன்னு அசிங்கமா திட்டாதீங்க என மறைமுகமாக சொல்லி அனுப்பி வைத்தார். ஆனால், மூன்று நாட்கள் கூட முடியவில்லை அதற்குள் அமுதவாணன் டார்ச்சர் தாங்க முடியாமல், "செத்த பயலே நாற பயலே" என அவர் வழக்கமாக திட்டுவது போல திட்ட ஆரம்பித்து விட்டார். ரூல்ஸ் மீறப்படும் என விக்ரம் படத்தில் ஃபகத் ஃபாசில் பேசும் வசனத்தையே போட்டு ஜிபி முத்துவின் கெத்தை அவரது ஆர்மியினர் காட்டி வருகின்றனர்.

  பார்த்தாலே இரிடேட் ஆகுது

  பார்த்தாலே இரிடேட் ஆகுது

  20 ஆயிரம் மக்கள் போட்டியாளர்களில் இருந்து தேர்வான டிக் டாக் பிரபலம் தனலட்சுமி அடுத்த ஜூலியாகவே மாறிவிடுவார் போல என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். ஜூலியே பிக் பாஸ் அல்டிமேட்டில் பக்காவாக மாறிவிட்டார். எதற்கு எடுத்தாலும், எல்லோரிடமும் ஒரு அட்ஜஸ்ட்மென்ட் (இது வேற) கூட இல்லாமல் இருந்து வரும் தனலட்சுமியை பார்த்தாலே இரிடேட் ஆகுது என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

   சாம்பாருக்கு சண்டை

  சாம்பாருக்கு சண்டை

  விஜே மகேஸ்வரி கஷ்டப்பட்டு கிச்சன் டீமில் அனைத்து போட்டியாளர்களுக்காக சமைத்துக் கொண்டிருக்க ஏன் இப்பவே சமைக்கிறீங்க என எந்தவொரு ஹெல்ப்பும் பண்ணாமல் தனலட்சுமி கேட்டது ரசிகர்களை ரொம்பவே இரிடேட் ஆக்கியது. மேலும், இருவரும் லூசு மாதிரி கேட்காத, லூசு மாதிரி பேசாத என மாறி மாறி திட்டிக் கொண்டதை பார்த்த ரசிகர்கள் தனலட்சுமி மீது தான் தப்பு இருக்கு என அவரை திட்டினர்.

  நாரதர் வேலை பார்க்குறாரு

  விஜே மகேஸ்வரியை தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்து நல்லவர் போல நடிக்கிறாரு, நாரதர் வேலை பார்க்கிறாருன்னு தனலட்சுமி கேமரா முன்பாக சென்று சொன்னது பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது. நான் நடிக்கிறேன்னா, என் தம்பிகளுக்கு தெரியும் நான் நடிக்கிறேனா உண்மையா இருக்கேனா என்று என அவரும் கேமரா முன்பாக சென்று தனது நிலைபாட்டை வெளிப்படுத்தினார்.

  ஜிங் ஜக் ஆயிஷா

  தனலட்சுமியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு சத்யா சீரியல் நடிகை ஆயிஷா நல்லாவே ஜிங் ஜக் போடுகிறார் என்றும் நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். மேலும், வருத்தப்பட்டு பேசிய ஜிபி முத்துவுக்கு ஆதரவாக #GPMuthu ஹாஷ்டேக் இரவு முழுவதும் டிரெண்டாகி வருகிறது.

  கண்கலங்கிய ஜிபி முத்து

  நான் உன்னை என் மகளாத்தான் நினைச்சி பார்த்தேன், நீ ஏன் இப்படி பேசுற என ஜிபி முத்து டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு கண் கலங்கி அழுததை பார்த்த சக ஹவுஸ்மேட்ஸ் அவரை சமாதானம் செய்தனர். சோஷியல் மீடியாவில், எங்க தலைவன் ஜிபி முத்துவையே அழ வச்சிட்டீயா என தனலட்சுமிக்கு எதிராக ஒரு பெரும் படையே திரண்டு விட்டது.

  எந்த கில்லியும் வர முடியாது

  எந்த கில்லியும் வர முடியாது

  இந்த தனலட்சுமியை ஜிபி முத்து பாண்டியிடம் இருந்து காப்பாற்ற எந்த கில்லியும் வர முடியாது என ட்ரோல் மீம்களும் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன. தனலட்சுமி தேவையில்லாமல் ஒவ்வொருத்தரிடமும் சண்டை போட்டு வருகிறார் என்று கூறி வருகின்றனர்.

  முதல் எவிக்‌ஷன் நீங்க தான்

  முதல் எவிக்‌ஷன் நீங்க தான்

  தனலட்சுமியும் டிக் டாக் பிரபலம், ஜிபி முத்துவும் டிக் டாக் பிரபலம் என்பதால் தான் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது என்றும் அடுத்த வாரம் எவிக்‌ஷன் இருந்தால், முதல் எவிக்‌ஷனே தனலட்சுமி தான் நாங்க எல்லாரும் சேர்ந்து உன்னை எவிக்ட் செய்து வெளியே அனுப்பிவிடுவோம் என ஜிபி முத்து ஆர்மியினர் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

  English summary
  GP Muthu cried after fight with Dhanalakshmi at Bigg Boss Tamil Season 6 house shocks fans. Many fans wants Dhanalakshmi will be evict as a first contestant from the house and lends their supports to GP Muthu.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X