ஜிப் போடாமல் நின்ற ஜிபி முத்து.. மகேஷ்வரி முன்னாடி மானமே போயிடுச்சு.. பிக் பாஸ் அலப்பறைகள்!

சென்னை: 20 பேரை உள்ளே அனுப்பி விட்டு வெறும் இரண்டு கக்கூஸ் மட்டுமே வைத்திருக்கிறார்களே என ஜிபி முத்து கேட்டதில் இருந்தே பிக் பாஸ் சீசன் 6 சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது.

மழையில் தன்னையே மறந்து தலைவன் ஜிபி முத்து போட்ட ஆட்டத்தை வசீகரா பாடலுடன் எல்லாம் மிக்ஸ் செய்து வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் பறக்கின்றன.

இந்நிலையில், இன்று அதிகாலை பாத்ரூம் போயிட்டு வெளியே வந்த ஜிபி முத்து ஜிப்பை போடாமல் மகேஸ்வரியுடன் நின்று பேசிய அதிகாலை அலப்பறைகளும் அரங்கேறின.

காலங்காத்தால இதெல்லாம்

காலங்காத்தால இதெல்லாம்

24 மணி நேரம் பிக் பாஸ் சீசன் 6 ஓடுவதால், புதிய போட்டியாளர்கள் நள்ளிரவில் என்ன பண்றாங்க, காலையில் என்ன பண்றாங்க என்பதை பார்க்க டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போட்டு பார்த்த நெட்டிசன்கள் காலங்காத்தால இந்த கொடுமையெல்லாம் பார்க்கணுமா என சோஷியல் மீடியாவில் ட்ரோல் போட்டு புலம்பி வருகின்றனர்.

அந்த இடத்தில் இம்சை

அந்த இடத்தில் இம்சை

காலங்காத்தால எழுந்து கொண்ட விஜே மகேஷ்வரி கார்டன் ஏரியாவில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். பின்னர், அர்ஜென்ட்டாக காலைக் கடன் அழைக்க பாத்ரூம் ஏரியா பக்கம் போன அவர், அங்கே பாத்ரூம் ஹவுஸ்ஃபுல்லாக இருப்பதை பார்த்து அப்செட் ஆகினார். பின்னர், அமுத வாணன் என குரல் கொடுத்து கழிவறைக்குள் இருந்த அமுதவானனை கலங்கடித்து விட்டார். அந்த இடத்தில் கூட மனுஷனை நிம்மதியாக போக விடமாட்டியாம்மா என விஜே மகேஷ்வரியை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

ஜிபி முத்து எனக்கு அண்ணா

ஜிபி முத்து எனக்கு அண்ணா

மகேஸ்வரி பண்ணதுல கடுப்பான அமுதவாணன் வெளியே வந்ததும், ஜிபி முத்துவையும் மகேஷ்வரியையும் ஹீரோ, ஹீரோயினா ஆக்கிடணும்னு பேசி, மகேஷ்வரியை காண்டாக்க நினைத்தார். அவர், எனக்கு அண்ணா மாதிரி, ஜிபி முத்துவை பார்த்தாலே ஒரு ஃபேமிலி மெம்பர் ஃபீலிங் வருதுன்னு பேசி ஸ்கோர் செய்து விட்டார்.

ஜிப் போடாத ஜிபி முத்து

ஜிப் போடாத ஜிபி முத்து

ஜிபி முத்துவும் காலைக் கடனை முடித்து விட்டு வெளியே வந்து மகேஷ்வரி அண்ணான் என தன்னை அழைத்தது ரொம்ப சந்தோஷம். இப்படியெல்லாம் உறவு கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் என கையெல்லாம் கொடுத்து மகேஷ்வரியிடம் பேசிக் கொண்டிருக்க, டக்கென தான் ஜிப்பு போடவில்லை என்பதை புரிந்து கொண்டு உடனடியாக பின்னாடி திரும்பி ஜிப் போட்டார்.

மானம் போச்சு

மானம் போச்சு

அமுதவானன் என்ன ஜிபி முத்து டக்கென திரும்புறாரே என கேட்க, அவர் ஜிப் போட மறந்துட்டாரு, அதான் திரும்பி போடுறாருன்னு மகேஷ்வரி சிரித்துக் கொண்டே சொல்ல, காலையிலேயே ஜிபி முத்துவோட மானத்த மகேஸ்வரி வாங்கிடுச்சே என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X