இதுக்குத்தான் பிக் பாஸ் வீட்டை விட்டு போனாரா.. சன்னி லியோனுக்கே பால்கோவா ஊட்டிவிட்ட ஜிபி முத்து!
சென்னை: சன்னி லியோன் நடித்துள்ள 'ஓ மை கோஸ்ட்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
சதிஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா ஆகியோருடன் டிக் டாக், பிக் பாஸ் பிரபலம் ஜிபி முத்துவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்நிலையில், ஓ மை கோஸ்ட் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஜிபி முத்து கலகலப்பாக பேசியது வைரலாகி வருகிறது.

ஓ மை கோஸ்ட் ட்ரெய்லர்
'ஓ மை கோஸ்ட்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஆர். யுவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சன்னி லியோன், சதிஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா ஆகியோருடன் ஜிபி முத்துவும் நடித்துள்ளார். ஹாரர் ப்ளஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஓ மை கோஸ்ட் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஜிபி முத்து பேச்சு
ஓ மை கோஸ்ட் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஜிபி முத்துவும் பங்கேற்றார். அவர் நடித்துள்ள முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மேடையேறிய ஜிபி முத்து ஆரம்பம் முதலே அதகளமாக பேசி, ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார். எனக்கு இதுவே முதல் படம் என மகிழ்ச்சியாக கூறிய ஜிபி முத்து, தயாரிப்பாளர் சசிகுமார், இயக்குநர் ஆர் யுவனுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், எனக்கு இது முதல் படம் என்பதால் "ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுதான் என்னுடைய முதல் படம். இயக்குநரிடம் நடிக்க பயமா இருக்குனு சொன்னேன். கவலைபடாதீங்க. சொல்றபடி நடிங்கன்னு இயக்குநர் சொன்னார்" எனக் கூறினார்.

சன்னி லியோன் பற்றி ஜிபி முத்து
தொடர்ந்து பேசிய ஜிபி முத்து, "இந்தப் படத்துல சன்னி லியோன் கூட நடிச்சிருக்கேன் நண்பர்களே. சன்னி லியோன் கூட நடிக்குறேன்னு தெரிஞ்சதும் நிறைய கமெண்ட்ஸ்லாம் வரும். அப்போ சன்னி லியோன் அக்கா யார்ன்னே எனக்கு தெரியாது, அதனால அவங்க நடிச்ச படங்கள் பார்த்து தான் தெரிஞ்சுக்கிட்டேன்" என சொன்னதும், மொத்த அரங்கமும் சிரிப்பால் அதிரிந்தது. மேலும், "இதில் சன்னி லியோன் கூட சேர்ந்து டான்ஸ் ஆடிருக்கேன்" என உற்சாகமக் கூறினார்.

பால்கோவா கொடுத்த ஜிபி முத்து
அப்போது மேடையில் இருந்த சன்னி லியோனுக்கு ரசிகர்கள் சார்பாக பால்கோவா ஊட்டிவிட ஆசை எனக் கூறிய ஜிபி முத்து, ஒருக்கட்டத்தில் தனது விருப்பத்தையும் நிறைவேற்றினார். பதிலுக்கு சன்னி லியோனும் ஜிபி முத்துவுக்கு பால்கோவா ஊட்டிவிட ரசிகர்களின் கை தட்டல் விண்ணைப் பிளந்தது. மேலும், இந்தப் படத்தின் நான் டாக்டராக நடித்துள்ளேன், அந்த கேரக்டர் பேரை கேட்டாலே சிரிப்பு தான் வரும், படம் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க என்றார். முன்னதாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜிபி முத்து பாதியிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











