“நேத்து ராத்திரி எம்மா“மழையில் ஆட்டம் போட்ட ஜிபி முத்து..பிக் பாஸ் வீட்டில் மாஸ் காட்டுறாரே?
சென்னை : டிக் டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டில் கொட்டும் மழையில் செம குத்தாட்டம் போட்டு மாஸ் காட்டி உள்ளார்.
விஜய் டிவியில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கியது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், செல்போஃன், வெளியுலக தொடர்பு என எதுவுமே இல்லாமல் வீட்டிற்குள் இருந்து பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்குகளை செய்ய வேண்டும்.
பிக் பாஸ் கொடுக்கும் அனைத்து டாஸ்குகளையும் செய்து கடைசி வரை வீட்டில் இருப்பவரே டைட்டிலை வெல்ல முடியும்.

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , மெட்லி ஒலி சாந்தி, சீரியல் நடிகர் அஸீம், நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், ஐஸ்வர்யாவின் அண்ணன் மணிகண்ட ராஜேஷ், நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் என 20 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

நாலு பேருக்கு தண்டனை
முதல் நாளான இன்று போட்டியாளர்களிடம் சண்டையை ஏற்படுத்தும் வகையில், வீட்டில் உங்களின் மனதை கவராதவர் என கேள்வி கேட்கப்பட்டது. இதில், பலரும் விக்ரமன், ஜனனி, நிவா, குயின்ஸி ஆகிய நான்கு பேரை கூறினார். இதனால், நான்கு பேரும் வீட்டை விட்டு வெளியே படுக்க வேண்டும் என தண்டனை கொடுக்கப்பட்டது. இதனால் இரவு முழுவதும் வெளியில் இருந்தனர்.

செம ஆட்டம்
இந்த சீசனில் ரசிகர்களின் மனதை அதிகம் கவர்ந்தவர் யார் என்றால் அது ஜிபி முத்து தான்.அவரின் எதார்த்தமான பேச்சும் வெகுளித்தனத்தை அனைவரும் ரசித்துபார்த்து வருகின்றனர். இன்றைய எபிசோடில், ஜிபி முத்து கொட்டும் மழையில் நனைந்தபடி மேகம் கருக்குது பாடலுக்கும்,நேத்து ராத்திரி எம்மா பாடலுக்கும் அவருடை ஸ்டைலில் செம ஆட்டம் போட்டார்.

நாலு டீம் தலைவர்கள்
இதையடுத்து, ஹவுஸ்மேட்ஸ் கிச்சன், பாத்ரூம், வெசல், கிளீனிங் என 4 குழுக்களாக பிரிக்கப்படுகின்றனர். இதில் கிச்சன், பாத்ரூம், வெசல், கிளீனிங் ஆகிய அணியின் கேப்டனை தேர்வு வித்தியாசமான முறையில் கேள்விகளை கேட்டார் பிக்பாஸ். அவற்றை மற்ற ஹவுஸ்மேட்ஸ் பிளாஸ்மா டிவி மூலம் பார்த்து அந்தந்த டீமுக்கான தலைவரை தேர்வு செய்தனர்.


Click it and Unblock the Notifications











