சீமான் பற்றி ஆபாச வீடியோ.. ஜிபி முத்து இத தெரிஞ்சு செய்றாரா தெரியாம செய்றாரா?.. பஞ்சாயத்து உறுதி
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர். சினிமாவிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒதுங்கியிருந்த அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல் ஐ கே படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். இந்நிலையில் அவர் பற்றி பிரபல யூடியூபர் ஜிபி முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டோரியில் வைத்திருக்கும் வீடியோ சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
சினிமா செலிபிரிட்டிகள்போன்று தற்போது தமிழ்நாட்டில் யூடியூப் செலிபிரிட்டிகளும் வெகு பிரபலமாகிவிட்டார்கள். டிடிஎஃப் வாசன், மதன் கௌரி, ஜிபி முத்து என அந்த வரிசையாக நீளும். இவர்களில் ஜிபி முத்து தனது வெகுளித்தனத்தால் பலராலும் ரசிக்கப்படக்கூடியவர். முக்கியமாக அவர் பேசும் விதமும், தூத்துக்குடி வட்டார வழக்கை இயல்பாக பயன்படுத்துவதும் அவர் ஃபேமஸாக காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் முத்து: அவர் போட்ட வீடியோக்கள் அனைத்தும் எக்கச்சக்க பார்வைகளை பெற்றன. இதன் காரணமாக சரசரவென்று அவரது புகழ் உச்சாணியில் ஏறியது. அந்த பிரபல்யத்தின் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் அவருக்கு அமைந்தது. அவரும் உற்சாகமாக வீட்டுக்குள் சென்றார். போட்டியில் தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாகவே விளையாண்டார். கண்டிப்பாக அவர் டைட்டில் அடிப்பார் என்றே பலரும் கணித்திருந்தார்கள். அந்த அளவுக்கு ஆதரவும் இருந்தது.

வெளியேறிய முத்து: ஆனால் தனது குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை; அவரை பார்க்க வேண்டும் என சொல்லி சுய விருப்பத்தின் பேரில் போட்டியிலிருந்து வெளியேறிவிட்டார். அவர் அப்படி வெளியேறியது ரசிகர்களுக்கு ஷாக்கை கொடுத்தது. பலரும் அவரை மிஸ் செய்வதாக தெரிவித்தார்கள். பிக்பாஸிலிருந்து வெளியே வந்த அவர் சில படங்களில் நடித்தார். சமீபத்தில்கூட ட்யூட் பட ப்ரோமோஷனில் அவர் கலந்துகொண்டு கலகலப்பை ஏற்படுத்தியிருந்தார்.
ஜிபி முத்துவின் வீடியோக்கள்: இது ஒருபக்கம் இருக்க அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிடுகிறார். சமீபத்தில்கூட கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் ரசிகர்களை சகட்டுமேனிக்கு விளாசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவர் இப்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருக்கும் வீடியோ ஒன்று சர்ச்சையை உண்டு செய்திருக்கிறது.
என்ன வீடியோ?: அதாவது இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானை கடவுள் போன்று சித்தரித்து அதில் ஆபாச தொனியோடு சில விஷயங்களை செய்தும்; ஜிபி முத்துவின் குரலை பயன்படுத்தியும் விஜய்யின் ரசிகர்கள் வீடியோ ஒன்றை சோஷியல் மீடியாக்களில் சுத்தலில் விட்டிருக்கிறார்கள். அந்த வீடியோவைத்தான் முத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருக்கிறார்.
தெரிந்துதான் செய்கிறாரா?: இதை பார்த்த பலரும் ஜிபி முத்து இந்த வீடியோவை ஏன் ஸ்டோரியாக வைத்திருக்கிறார். இது ஆபாச தொனியில் இருக்கிறது என்று தெரிந்துதான் இதை செய்கிறாரா? என்று கேள்வி எழுப்பிவருகிறார்கள். முன்னதாக விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததை வைத்து சீமான் அவரை கடுமையாக விமர்சித்துவருகிறார். எனவே தவெகவினரும் Virtual warriors என்ற பெயரில் அவரை மோசமாக பேசி வீடியோக்கள் வெளியிடுவது அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











