»   »  இளையராஜாவின் 1000வது படம் தாரை தப்பட்டை.. மெகா ஆடியோ ரிலீஸ்.. பொங்கலுக்கு படம் ரிலீஸ்!

இளையராஜாவின் 1000வது படம் தாரை தப்பட்டை.. மெகா ஆடியோ ரிலீஸ்.. பொங்கலுக்கு படம் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாக்கியுள்ள 1000வது படம் தாரை தப்பட்டை வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலா இயக்கத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உருவாகிவந்த தாரை தப்பட்டை நாட்டுப் புற இசை, நடனத்துக்கு முக்கியத்துவம் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


Grand Audio launch for Maestro's Thaarai Thappattai

சசிகுமாரும் வரலட்சுமியும் ஜோடி சேர்ந்துள்ள இந்தப் படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள், நிஜ நாட்டுப்புறக் கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.


இளையராஜாவின் 1000வது படம் என்பதால், அந்த மாபெரும் இசைமேதையை கவுரவிக்கும் பொருட்டு பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவை டிசம்பரில் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த விழாவில் தமிழ்த் திரையுலகமே கலந்து கொண்டு இளையராஜாவை வாழ்த்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


படம் பொங்கல் தினமான ஜனவரி 14-ம் தேதி உலகெங்கும் பிரமாண்டமாக வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பொங்கல் தினத்தன்று 5 படங்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டாலும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள முதல் படம் தாரை தப்பட்டைதான்.

English summary
As we already announced, Bala's Thaarai Thappattai has confirmed its Pongal release officially.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil