பிள்ளையார் சுழி.. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ரவி மோகன்!
சென்னை: முதற் கடவுளான விநாயகர் சதுர்த்தி நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகப் பெருமானை வணங்கி விட்டு எந்த விஷயத்தை செய்தாலும் அதில் வெற்றி நிச்சயம் கிடைக்கும். அனைத்து தடைகளையும் நீக்கி, புதிய தொழிலை தொடங்குவதற்கு முன் எந்தவொரு புதிய செயலின் தொடக்கத்திலும் விநாயகரை வணங்கி வழிபடுவது பாரம்பரியமாகவும், நம்பிக்கையாகவும் உள்ளது. இதனால், கையில் எடுத்த காரியம் தடையின்றி வெற்றிகரமாக நிறைவேறும் என்பதும் நம்பிக்கை. அந்த நம்பிக்கையுடன் நடிகர் ரவி மோகன் சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை இன்று தொடங்கி உள்ளார்.
எடிட்டர் மோகனின் மகனான ரவி, தனது அண்ணன் இயக்கத்தில் உருவான ஜெயம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார் முதல் படமே மிகப்பெரிய வெற்றித்திரைப்படமான அமைந்ததைத் தொடர்ந்து தனது பெயருடன் ஜெயத்தை இணைத்துக்கொண்டு ஜெயம் ரவி என 20 ஆண்டுகளுக்கு மேலாக வலம் வந்தார். இதைத்தொடர்ந்து, போகிப்பண்டிகை அன்று இன்ஸ்டாகிராமில் அறிக்கை வெளியிட்ட ஜெயம் ரவி இன்றில் இருந்து தன்னை ரவி மோகன் என அழைக்கும்படி ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்தார்.

புது தயாரிப்பு நிறுவனம்: ரவி மோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்க இருப்பதாகவும் யோகி பாபுவை வைத்து தனது முதல் படத்தை இயக்கவிருப்பதாகவும் நீண்ட நாட்களாக தகவல் வெளியாகி வந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரி தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் . இதன் திறப்பு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ரவி மோகன் வெள்ளை நிறத்தில் உடை அணிந்து இருந்தார். அதே நிறத்தில் ரவி மோகனின் தோழி கெனிஷவும் உடை அணிந்து இருந்தார். இருவரும் அருகருகே அமர்ந்து இருந்தனர். இந்த திறப்பு விழாவில் பாடல், நடனம் என நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. தயாரிப்பு நிறுவனத்தின் துவக்க விழாவுக்கு முன்பு பாடகி கெனிஷாவுடன் இணைந்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார் ரவி மோகன், மேலும் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











