»   »  'கருப்பன்' படத்துக்கு அடித்த அதிர்ஷ்டம்! - தியேட்டர்கள் அதிகரிப்பு

'கருப்பன்' படத்துக்கு அடித்த அதிர்ஷ்டம்! - தியேட்டர்கள் அதிகரிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : விஜய் சேதுபதி, தன்யா, பாபி சிம்ஹா, பசுபதி, சிங்கம்புலி உள்பட பலர் நடித்த படம் 'கருப்பன்'. 'ரேணிகுண்டா' படத்தை இயக்கிய ஆர்.பன்னீர் செல்வம் இப்படத்தை இயக்கி இருந்தார். ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார்.

கடந்த 29-ம் தேதி இந்தப் படம் வெளிவந்தது. புதிய கதை இல்லாமல் அரைத்த மாவையே அரைத்த இந்தப் படத்துக்கு இருவேறுபட்ட விமர்சனங்கள் கிடைத்தன. இந்த வாரத்துடன் தியேட்டரை விட்டு எடுக்கப்பட்டிருக்க வேண்டிய கருப்பன் படத்துக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.

Great luck for karuppan movie

தமிழக அரசு விதித்துள்ள 10% கேளிக்கை வரியை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கம் 6-ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பால் நேற்று வெளிவர வேண்டிய 7 படங்கள் வெளிவரவில்லை.

இதனால் அந்தப் படங்களுக்கு ஒதுக்கி வைத்திருந்த தியேட்டர்களை 'கருப்பன்' படத்துக்குக் கொடுத்து விட்டார்கள். இதனால் 'கருப்பன்' படத்திற்கு 100 தியேட்டர்கள் வரை அதிகரித்துள்ளது.

Great luck for karuppan movie

படத்தை வாங்கி வெளியிட்ட பிக்சர் பாக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அலெக்சாண்டர் இதனால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார். 'இறைவி' 'தர்மதுரை' உள்ளிட்ட விஜய்சேதுபதியின் படங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருபவர் இவரே.

English summary
Vijay Sethupathi, Tanya and many others starred film 'Karuppan' released on last week. The film, which has been taken away from the theater this week, luckily it was extended now. As the new films did not come, the theaters that were set aside were given to the film 'Karuppan'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil