»   »  ஒரு நாள் போதுமா, பாலமுரளி கிருஷ்ணாவை பற்றி பேச இன்றொரு நாள் போதுமா?

ஒரு நாள் போதுமா, பாலமுரளி கிருஷ்ணாவை பற்றி பேச இன்றொரு நாள் போதுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா சென்னையில் காலமானார். அவர் பாடாத மேடைகளே கிடையாது என்று கூறும் அளவுக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்.

சென்னையில் வசித்து வந்த பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிர் இழந்தார். அவருக்கு வயது 86.

பாலமுரளிகிருஷ்ணா 1930ம் ஆண்டு ஜுலை மாதம் 6ம் தேதி ஆந்திராவில் உள்ள சங்கரகுப்தம் பகுதியில் பிறந்தவர்.

இசை

இசை

6 வயதில் இருந்து பாடத் துவங்கிய பாலமுரளிகிருஷ்ணா 8 வயதில் விஜயவாடாவில் நடந்த தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சியில் பாடினார்.

பாடல்

பாடல்

15 வயதில் 72 மேலகர்த ராகங்களை கரைத்துக் குடித்தவர். பாடுவது தவிர கஞ்சிரா, மிருதங்கம், வயலினும் அருமையாக வாசிப்பார். உலக அளவில் அவர் இதுவரை 25 ஆயிரம் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

சினிமா

சினிமா

பாலமுரளிகிருஷ்ணா பல பக்திப்பாடல்களுக்கு இசையமைத்துள்ளார், பாடியுள்ளார். சினிமா பாடல்களும் பாடியுள்ளார். ஏவிஎம் தயாரிப்பில் 1967ம் ஆண்டு வெளியான பக்த பிரகலாதா படத்தில் நாரதராக நடித்து தனது திரையுலக பயணத்தை துவங்கினார் பாலமுரளிகிருஷ்ணா.

செவாலியே

செவாலியே

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதை பெற்றவர் பாலமுரளிகிருஷ்ணா. சிறந்த இசையமைப்பாளர், பாடகருக்கான தேசிய விருதுகளை பெற்றவர். மத்திய அரசு அவருக்கு பத்மவிபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கியது. சங்கீத கலாமணி உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வாங்கியவர் பாலமுரளிகிருஷ்ணா.

English summary
Legendary carnatic singer Balamuralikrishna passed away in Chennai on Tuesday aged 86. The renowned singer was conferred with Padma shree, padma vibhushan and padma bhushan by the Indian government for his contribution to Indian art.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil