»   »  வடபழனி கோவிலில் பிச்சை எடுக்கும் ஜெயலலிதா-சிவாஜி பட டான்ஸர் ஜமுனா

வடபழனி கோவிலில் பிச்சை எடுக்கும் ஜெயலலிதா-சிவாஜி பட டான்ஸர் ஜமுனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா படத்தில் குரூப் டான்ஸராக இருந்த ஜமுனா தற்போது வடபழனி கோவிலில் பிச்சை எடுத்து வருகிறார்.

ஜெயலலிதா முன்னணி நாயகியாக இருந்த காலத்தில் குரூப் டான்ஸராக இருந்தவர் ஜமுனா. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த மோட்டார் சுந்தரம் பிள்ளை, ஔவையார், சரஸ்வதி சபதம் உள்ளிட்ட படங்களில் குரூப் டான்ஸராக இருந்துள்ளார்.

 Group dancer Jamuna is begging at a temple in Chennai

தற்போது 80 வயதாகும் அவர் வடபழனி கோவிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஜமுனாவின் கணவர் மேக்கப் மேனாக இருந்துள்ளார். சென்னையில் வசதியாக வாழ்ந்துள்ளனர்.

கணவர் இறந்த பிறகு குடும்பத்தாரால் கைவிடப்பட்ட ஜமுனா பிச்சை எடுத்து வருகிறார். அவருக்கு சிவக்குமார், கமல் ஹாஸன் முன்பு பண உதவி செய்துள்ளனர். மீண்டும் அவர்களிடம் சென்று உதவி கேட்க அவர் விரும்பவில்லை.

இந்நிலையில் பலருக்கும் உதவி செய்து வரும் நடிகர் விஷால் தனக்கு உதவ மாட்டாரா என்று ஜமுனா எதிர்பார்க்கிறார்.

English summary
Jamuna who worked as a group dancer in many movies including former CM Jayalalithaa's is begging at a temple in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil