»   »  ஜிஎஸ்டி பற்றி விஜய் சொன்னதை தான் 'இந்த' படத்தில் காட்டியிருக்கிறார்கள்: இதையும் எதிர்ப்பார்களோ?

ஜிஎஸ்டி பற்றி விஜய் சொன்னதை தான் 'இந்த' படத்தில் காட்டியிருக்கிறார்கள்: இதையும் எதிர்ப்பார்களோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் ஏழைகளும், விவசாயிகளும் படும் பாட்டை அநீதிக் கதைகள் குறும்படத்தில் அழகாக காண்பித்துள்ளனர்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து விஜய் வசனம் பேசியதால் மெர்சல் படத்திற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்த காட்சியை நீக்குமாறு அடம்பிடித்தார்கள்.

ஜி.எஸ்.டி.யால் மக்கள் படும் அவதியை காட்டியுள்ளது அநீதிக் கதைகள் குறும்படம்.

ஜிஎஸ்டி

ஏற்கனவே ஊருக்கு சோறும்போடும் விவசாயி சோறு சாப்பிட வழியில்லாமல் உள்ளான். இந்நிலையில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் விவசாயிகளின் நிலை படுமோசமாகியுள்ளதை அநீதிக் கதைகள் குறும்படத்தில் காட்டியுள்ளனர்.

மருத்துவமனை

மருத்துவமனை

விஜய் மருத்துவ துறையில் நடக்கும் ஊழல் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் ஜி.எஸ்.டி.யால் ஒரு தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணியை சாலையோரம் போட்ட அவலக் காட்சியை அநீதிக் கதைகள் அற்புதமாக விளக்கியுள்ளது.

திண்டாட்டம்

திண்டாட்டம்

ஜி.எஸ்.டி.யால் நாப்கின் வாங்க சாதாரண பெண்கள் திண்டாடுகிறார்கள். ஜி.எஸ்.டி.யை நினைத்தால் மக்கள் கடைக்கு செல்ல பயப்படுகிறார்கள் என்பதையே குறும்படம் கூறுகிறது.

ராஜு முருகன்

காம்ரேட் டாக்கீஸ் தயாரிப்பில் என் உதவி இயக்குனர் பெ.எழிலரசன் GST-க்கு எதிராக 'அநீதிக் கதைகள்' என்ற இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார். குறும்படத்தோடு தோழர் ஆர்.நல்லக்கண்ணு,தோழர் ஜி.ஆர், மற்றும் மக்களின் கருத்துக்களும் இடம்பெற்று இருக்கின்றன.சமகால அரசியல் சூழலில் இது முக்கியமான பதிவு. தவறாமல் பாருங்கள் தோழர்களே என்று இயக்குனர் ராஜு முருகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

English summary
Aneethi Kathaigal shortfilm has shown the downside of GST in a beautiful manner.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil