»   »  ஜிஎஸ்டி பயம்... அவசர அவசரமாக ரிலீஸுக்கு தயாராகும் படங்கள்!!

ஜிஎஸ்டி பயம்... அவசர அவசரமாக ரிலீஸுக்கு தயாராகும் படங்கள்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜுலை 1 முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்தால் டிக்கெட் விலை எகிறும் என்பதால் ஜுன் மாதத்திலேயே களம் இறங்குகின்றன காத்திருந்த படங்கள்.

மத்திய அரசு அறிவித்திருக்கும் ஜிஎஸ்டி வரியில் சினிமாவுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட இருக்கிறது. இதன் விளைவாக ஜுலை 1 முதல் டிக்கெட் கட்டணம் சுமார் 30 சதவீதம் அளவுக்கு உயரும். 120 ரூபாய் டிக்கெட் 152 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.

GST fear: More films to hit screen this month

இது சினிமாவை மக்களிடமிருந்து தொலைதூரத்துக்கு கொண்டு சென்றுவிடும் என்று சினிமாக்காரர்கள் பயப்படுகிறார்கள். ஏற்கனவே திருட்டு டிவிடி, பைரஸி என்று தியேட்டர்கள் காற்று வாங்குகின்றன. இந்த டிக்கெட் விலை உயர்வால் இன்னும் காற்று வாங்கும். அதனால் ஜுலையில் ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்திருந்த படங்கள் கூட ஜுனிலேயே களம் இறங்குகின்றன.

கடந்த வாரம் 10க்கு மேற்பட்ட படங்கள் களம் கண்டன. இந்த மாதத்திலேயே சுமார் 30 படங்கள் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
It seems that a large number of new films will release in the month of June due to GST fear.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil