»   »  சினிமாவும், நடிகர்களும் நாசமாகப் போகட்டும்: இது ஜிஎஸ்டி சாபம்

சினிமாவும், நடிகர்களும் நாசமாகப் போகட்டும்: இது ஜிஎஸ்டி சாபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிஎஸ்டி வரியால் தியேட்டர்களுக்கு செல்லும் கூட்டம் வெகுவாக குறையும்.

அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கஷ்டப்பட்டு எடுக்கப்படும் படங்களை தியேட்டர்களில் பார்க்கும் கூட்டம் குறைந்து வருகிறது. இந்நிலையில் ஒரே தேசம் ஒரே வரி என்று கூறி மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியுள்ளது.

சினிமா தியேட்டர்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

வரி

வரி

ஜிஎஸ்டி வரியால் சினிமா டிக்கெட்டுகளின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அட போங்கய்யா நீங்களும், உங்களின் வரியும் என்று கோபம் அடைந்துள்ளனர்.

சினிமா

சினிமா

ஆசைப்பட்டு தியேட்டருக்கு செல்பவர்களை, வேண்டாம் வீட்டிலேயே திருட்டு டிவிடியில் படம் பாருங்கள் என்று தூண்டுவது போன்று இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு அமைந்துள்ளது.

நாசம்

நாசம்

இந்த சினிமாவும், நடிகர்களும் நாசமாக போகட்டும் என்று சாபம் விட்டது போன்று உள்ளது மத்திய அரசின் இந்த வரிவிதிப்பு. புதிய இந்தியா பிறக்கிறது என்று மோடி கடந்த நவம்பர் மாதம் தெரிவித்தபோது அவரை வாழ்த்திய திரையுலகினருக்கு ஜூலை மாதம் அவர்கள் தலையில் இடிவிழப் போவது தெரியாமல் போய்விட்டது.

கூட்டம்

கூட்டம்

கஷ்டப்பட்டு எடுக்கப்படும் சினிமா படங்களை தியேட்டரில் குடும்பத்துடன் பார்ப்பவர்களின் எண்ணிக்கை இனி வெகுவாக குறையும். கேபிள் டிவியில் படம் போட்டால் பார்த்துக் கொள்வோம், தியேட்டருக்கு செலவு செய்யும் காசை வேறு எதற்காவது உறுப்படியாக செலவு செய்யலாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர் மக்கள்.

English summary
GST is a bane to the film industry. Fans are irritated by the sudden increase in ticket prices after GST comes into practice.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil