»   »  பாகுபலி "அவ்வளவு" சம்பாதித்தும் ராஜமெளலிக்கும், பிரபாஸுக்கும் "இவ்வளவு"தான் சம்பளம் கிடைத்ததாமே!

பாகுபலி "அவ்வளவு" சம்பாதித்தும் ராஜமெளலிக்கும், பிரபாஸுக்கும் "இவ்வளவு"தான் சம்பளம் கிடைத்ததாமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி படம் அந்தப் போடு போட்டது. அப்படி ஓடியது. வசூலையும் வாரிக் குவித்தது. ஆனால் அப்படத்தின் "ஒரிஜினல்" நாயகனான இயக்குநர் ராஜமெளலிக்கும், கதை நாயகனான பிரபாஸுக்கும் கிடைத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா.. கேட்டால் நம்ப மாட்டீர்கள்.

பாகுபலி மொத்தமாக 600 கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்து புதிய சாதனை படைத்தது. இந்தியத் திரையுலகில் இதுவரை எந்தப் படமும் வசூலித்திராத அளவாகும் இது.


தெலுங்கில் உருவான இப்படம் தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் உருவாகி ஒரே சமயத்தில் வெளியாகி பெரும் பரபரப்புடன் ஓடிய படமாகும். கடந்த ஜூலை 10ம் தேதி திரைக்கு வந்த இப்படம் அனைத்து மொழிகளிலும் டிவியிலும் கூட காட்டப்பட்டு விட்டது.


முதல் முறை...

முதல் முறை...

இந்தியத் திரையுலகில் ஒரு தென்னிந்திய மொழிப் படம் இந்த அளவுக்கு வசூலிலும், பாராட்டுக்களிலும் சாதனை படைத்தது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் தென்னிந்திய சினிமா குறித்த வட இந்தியர்களின் பார்வையிலும் கூட பிரமிப்பு கூடிப் போக பாகுபலி உதவியது.


கிராபிக்ஸ்...

கிராபிக்ஸ்...

இப்படத்தில் இடம் பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் அனைவரையும் அசரடித்தன. பெரிய மாயாஜாலமாக இது மக்கள் மனதைக் கட்டிப் போட்டது. கண் சிமிட்டாமல் பார்க்க வைத்தது.


போர்ப்ஸ் பட்டியலில்...

போர்ப்ஸ் பட்டியலில்...

இந்த நிலையில் 2015ம் ஆண்டு போர்ப்ஸ் இந்தியா பட்டியலில் ராஜமெளலியும், பிரபாஸும் இணைந்துள்ளனர். இது அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தரவில்லை. எதிர்பார்த்ததாகத்தான் இருந்தது.


சம்பளம்...

சம்பளம்...

ஆனால் இந்த இருவரும் பாகுபலி படத்திற்காக பெற்ற சம்பளமாக கூறப்பட்டிருப்புதான் ஆச்சரியத்தைத் தருகிறது. அதாவது இப்பட்டியலி்ல 77வது இடத்தை பிரபாஸ் பிடித்துள்ளார். 72வது இடத்தில் ராஜமெளலி இருக்கிறார். பிரபாஸின் சம்பளம் ரூ. 24 கோடியாம். ராஜமெளியின் சம்பளம் ரூ. 26 கோடியாம்.


2 வருடம்...

2 வருடம்...

இந்தப் படத்திற்காக பிரபாஸ் 2 வருடம் வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்பது முக்கியானது. இப்போது அடுத்த பாகத்திற்கும் மொத்தமாக கால்ஷீட் கொடுத்துள்ளார் பிரபாஸ்.


இவ்வளவு தானா?

இவ்வளவு தானா?

ஆக மொத்தம் வசூல் 600 கோடியைத் தாண்டிய போதிலும் கூட பிரபாஸ், ராஜமெளலிக்கு மொத்தமாக 60 கோடி வரைதான் வந்திருக்கும் போல.


English summary
Forbes list revealed that Prabhas ranked 77th on the list with earnings of Rs 24 crore while Rajamouli ranked 72nd with Rs 26 crore.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil