»   »  'காலா' யார்னு தெரிஞ்சுப் போச்சே!

'காலா' யார்னு தெரிஞ்சுப் போச்சே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஞ்சித் படத்தில் ரஜினியின் பெயர் தான் காலா.

பா. ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சேர்ந்த கபாலி படம் ஹிட்டானது. இதையடுத்து ரஜினி மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் சேர்ந்துள்ள படத்திற்கு காலா என்று பெயர் வைத்துள்ளனர்.


ரஜினிக்கு மிகவும் பிடித்த பெயர் என்பதால் அதையே படத்திற்கு வைத்ததாக ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார்.


கடவுள்

கடவுள்

காலா என்பது நீதியும் நேர்மையும் கொண்ட தமிழ் அரசர் கரிகாலனை குறிக்கும். திருநெல்வேலி பகுதியில் சிறு தெய்வ கடவுள் 'காலா'. மும்பையில் செட்டிலான நெல்லை மக்களின் வாழ்க்கை தான் காலா படம் என்று ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


ரஜினி

ரஜினி

படத்தில் ரஜினியின் பெயர் கரிகாலன். அவரை அனைவரும் செல்லமாக காலா என்று அழைப்பார்கள். தற்போதைக்கு இவ்வளவு தான் சொல்ல முடியம் என்று ரஞ்சித் கூறியுள்ளார்.


ட்விட்டர்

ட்விட்டர்

காலா தலைப்பு காலை 10 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆளாளுக்கு அது பற்றியே பேசிக் கொண்டிருப்பதால் காலா ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.


ஊடகங்கள்

ஊடகங்கள்

காலா என்ற ஒரு பெயரால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார் ரஜினிகாந்த் என்று தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Director Pa. Ranjith said that Rajinikanth's name in the upcoming movie is Karikaalan and people call him as Kaala.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil