»   »  ஓவியாவுக்கு பிடித்த பிக் பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா?

ஓவியாவுக்கு பிடித்த பிக் பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஓவியாவுக்கு பிடித்த பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்-வீடியோ

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பி வருவதை உறுதி செய்துள்ளார் ஓவியா. தனக்கு பிடித்த பிக் பாஸ் போட்டியாளர் அனுயா என்று தெரிவித்துள்ளார் ஓவியா.

ஆரவை காதலித்து அது தோல்வியில் முடிந்ததால் பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றார் ஓவியா. மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வருமாறு அவரது ரசிகர்கள் அழைத்தும் அவர் வரவில்லை.

ஒரு நாளுக்கு ரூ. 5 லட்சம் சம்பளம் தருகிறோம் என்று பிக் பாஸ் ஏற்பாட்டாளர்கள் கூறியும் அவர் ஏற்கவில்லை.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100வது நாள் அன்று ஓவியாவை பார்க்கலாம். 100வது நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை ஓவியாவே உறுதி செய்துள்ளார்.

ஓவியா

ஓவியா

சரவணா ஸ்டோர்ஸ் கடையை திறந்து வைக்க வந்த ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100வது நாளில் தன்னை பார்க்கலாம் என்று கூறி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தார்.

கொக்கு நட்ட

கொக்கு நட்ட

கடையை திறந்து வைக்க வந்த இடத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடிய கொக்கு நட்ட கொக்கு பாடலை பாடினார் ஓவியா. அதை கேட்ட அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

அனுயா

அனுயா

தன் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஓவியா. தனக்கு பிடித்த பிக் பாஸ் போட்டியாளர் அனுயா என்று தெரிவித்துள்ளார்.

English summary
Oviya has confirmed that she will participate in the grand finale of the Bigg Boss TV reality show. She added that Anuya is her favourite Bigg Boss contestant.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil