»   »  மாறுவேடத்தில் சத்யம் தியேட்டரில் 'பாகுபலி 2' படம் பார்த்த பிரபலம் யார் தெரியுமா?

மாறுவேடத்தில் சத்யம் தியேட்டரில் 'பாகுபலி 2' படம் பார்த்த பிரபலம் யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி 2 படத்தை மாறுவேடம் போட்டு சத்யம் தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1, 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.


விரைவில் ரூ. 1, 500 கோடியை எட்டி மீண்டும் புதிய சாதனை படைக்க உள்ளது.


பாகுபலி 2

பாகுபலி 2

பாகுபலி 2 படம் கடந்த மாதம் 28ம் தேதி ரிலீஸானது. ஆனால் பாகுபலி 2 படம் ஓடும் தியேட்டர்களில் இன்னும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதனால் படம் நிச்சயம் மேலும் பல சாதனைகள் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ரஜினி

ரஜினி

பாகுபலி 2 படத்தை ரஜினி ஏற்கனவே தனது வீட்டில் பார்த்துவிட்டு ட்விட்டரில் பாராட்டியிருந்தார். இந்நிலையில் அவருக்கு ரசிகர்களோடு ரசிகர்களாக சேர்ந்து படத்தை பார்க்கும் ஆசை ஏற்பட்டது.


சத்யம் சினிமாஸ்

சத்யம் சினிமாஸ்

ரஜினி மாறுவேடம் போட்டு சத்யம் தியேட்டருக்கு சென்று ரசிகர்களோடு ரசிகராக அமர்ந்து பாகுபலி 2 படத்தை பார்த்து ரசித்துள்ளார். தியேட்டரில் அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.


ரசிகர்கள்

ரசிகர்கள்

ரஜினி மாறுவேடம் போட்டு தியேட்டர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வது புதிது அல்ல. ரசிகர்கள் கூட்டம் கூடிவிடாமல் இருக்க அவர் மாறுவேடத்தில் சுற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Superstar Rajinikanth was reportedly seen at Satyam cinemas watching Baahubali-2 in order to gauge the reaction from audience. It's not new for the Superstar to watch movies in disguise as he has followed it as a ritual from quite a long time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil